பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 மலைநாட்டுத் திருப்பதிகள் பிறகு பரத்துவம் பாராட்டி நிற்கின்றான் என்றும், குறிப்பிட்டு ஆகவே அவனைக் காணுங்கால் கைகள் கூப்பிக் சொல்வீர்” என்று விண்ணப்பிக்குமாறு வேண்டுகின்றாள். ‘இன்னாள் உம்மை ஆசைப்பட்டிருக்கின்றாள்” என்று தெரிவித்தால் போதும் என்பது அவள் திருவுள்ளம். இங்கே இன்சுவை மிக்க வன்னெஞ்சர் காதல் போலன்றிறே மென் னெஞ்சர் காதல்; மெல்லியலார் காதல் அளவல்லாத என் காதல் சொல்வீர்; சொல்லுவார் தாழ்வே' என்ற ஈட்டின் பகுதி சுவைத்து இன்புறத்தக்கது. அடுத்து, ஆழ்வார்நாயகியின் கவனம் உப்பங்கழிகளில் மேய்ந்து திரியும் கரு நாரை ஒன்றின்மீது செல்லுகின்றது. அதனை நோக்கி இவ்வாறு பேசுகிறாள்: 'காதல் மென்பெடை யோடுடன் மேயும் கருநாராய்! வேத வேள்வி யொலிமு முங் கும்தண் டிருவண்வண்டுர் நாதன் ஞாலமெல் லாமுண்ட நம்பெருமானைக் கண்டு பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே’** |பெடை - பெண் நாரை, கரு - என்றது. புணர்ச்சியால் உண்டாகும் அழகினே; திறம் - தன்மை.) . துணைவியுடன் திரிவதால் நாரை புகருடன் விளங்குகின்றது. கடத்திரிகையாலே நாரை திரை நீங்கி வடிவு புகர்த்தபடி: பிரியாதார்க்கு உடம்பு வெளுக்காதாகாதே; தான் உடம்பு வெளுத்துக் கிடக்கிறாளிறே” என்ற ஈட்டின் பகுதி கருதத் தக்கது. வேதவேள்வியொலி முழக்கத்தில் மனம் ஈடுபட்டுக் 12. திருவாய் 6.1 : 1 (ஈடு காண்க.) 13. டிெ 6.1 : 2