பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்வண்டுர் தேவாதிதேவன் .#29 கால் தாழ்ந்து தன்னை மறத்தொழிந்ததாகப் பராங்குச் நாயகி கருதுகின்றாள். அவனருகிற் சென்று அவனுடைய திருவடிகளைத் தொழுது விண்ணப்பித்தால் போதும் என்று குறிப்பிடுகின்றாள். பக்தர்கட்கு ஆபத்து வருவதற்கு முன்னரே அவர்களைப் பாதுகாக்கும் இயல்பையுடையவ னாதலால் ஞால மெல்லாம் உண்ட' என்ற தொடரால் அவனது நீர்மையை எடுத்துக் காட்டுகின்றாள். இங்கு அவன் திறம் போலன்று; என் இடையாட்டத்தைச் சொல்லுங்கோள். சொல்லில் ஒரு மகாபாரதத்திற்குப் போருமாகாதே’ என்ற இன் சுவை மிக்க ஈட்டின் பகுதி சுவைத்து மகிழத் தக்கது. எங்கும் பறவைகள் கூட்டமாக உலாவுவது வழக்கம், அவை: உப்பங்கழியில் தம் இரைக்காக உழன்று கொண் டுள்ளன. அவை தாம் ஈடுபட்டிருக்கும் எம்பெருமானைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றன என்று கருதி அவன் திருவண்வண்டுரில் உறைகின்றதாகக் குறிப்பிடுகின்றாள். அவ்வூரின் செல்வ வளம் அவனை அங்கே கால்தாழப் பண்ணி, விட்டதாக அவள் நினைப்பு. சில இளமையான அன்னங், களையும் காண்கின்றாள் ஆழ்வார்நாயகி. அவற்றை நோக்கி, "உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே' என்கின்றாள். இன்ன காட்டிலே மான்ப்ேடை ஏவுடனே" கிடந்து உழவ்ா நின்றது என்று, சொல்ல வேண்டாவன்றே" என்ற ஈட்டின் பகுதி ஈண்டு நினைந்து இன்புறத் தக்கது. "ஒருத்தி உடலம் நைந்து உருகும்" என்றாலே போதும்; அதற்குமேல் சொல்ல வேண்டியதில்லை என்பது ஆழ்வார் நாயகியின் நினைப்பு. 14. திருவாய் 6.1 : 3 15, ആു. 6.1 : 4 16. ஏவுடனே-அம்போடு 17. திருவாய் 1.4 : 3, —9–