பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$30 மலைநாட்டுத் திருப்பதிகள் இந்த அன்னங்கள் உணர்த்தலின் அருமையையும் ஊடலின் அருமையையும் உணர்ந்து ஒரு கலத்தில் ஒக்க உண்டு திரிவாரைப்போல் ஆண் பெண் சேர்ந்தே மேய்கின்றன. என்பதையும் அறிகின்றாள். அவற்றுள் இன்னொரு கூட்டத்தைக் கண்டு, 'புணர்த்த ஆந்தண் துழாய்முடி நம்பெரு மானைக்கண்டு புணர்த்த கையினராய் அடியே னுக்கும் போற்றுமினே' (புணர்த்த - தொடுக்கப்பெற்ற; புணர்த்த கையினர் - சுப்பிய கையினர். அடியேனுக்கு - அடியேனுக்காகவும்.) என்று வேண்டுகின்றாள். அப்பெருமான் பக்தர்களைக் காப்பாற்றுவதற்கென்றே தனிமாலையிட்டிருக்கின்றான் என்பதைக் காட்டவேண்டியே "புணர்த்த பூத்தண் துழாய்முடி எம்பெருமான் என்று குறிப்பிடுகின்றாள். ஆகவே, அவரை அந்த அன்னங்கள் கூசாமல் சென்று காணலாம் என்பது குறிப்பு. திவ்விய தேசப்பயணம் செல்லு கிறவர்களை நோக்கி அந்தப்பேறு பெறாதவர்கள். அவர்கள் சென்று எம்பெருமானைச் சேவிக்கும் போது தங்களுக்காகவும் சேவிக்குமாறு வேண்டுவது போல, ஆழ்வார் நாயகியும் அன்னங்களிடம் அதே பாவனையில் 'அடியேனுக்கும் போற்றுமினே' என்று குறிப்பிடுகின்றாள். சில குயில்கள் அவள் கண்வட்டத்தில் காணப் பெறு கின்றன. அவற்றை நோக்கி, “ஆற்றல் ஆழி யங்கை அமார்பெரு மானைக்கண்டு மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே' 18. திருவாய் 6.1 : 5 19. டிெ 6.1 :6.