பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்வண்டுர் தேவாதிதேவன் - - - - - - - 131 {ஆற்றல் - சக்திவாய்ந்த, மாற்றம்-பதில்; மையல் -மியக் கம்: ஒரு வண்ணம் - ஒரு தன்மை.) என்று வேண்டுகின்றாள். தன் நிலையை எம்பெருமானுக்கு அறிவித்து அவனிடமிருந்து ஏதேனும் ஒரு மறுமாற்றம் கொண்டு வந்து தனக்குரைத்துத் தனது மயக்கத்தைத் தீர்க்க வேண்டுமென்பது அவளது வேண்டுகோள். மாற்றம் எப்படி யிருப்பினும் சரி; நல்லதாகவும் இருக்கட்டும், அல்லது அல்ல தாகவும் இருக்கட்டும். பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே' என்ற முறையிலிருப்பினும் போதும் என்பது அவள் நினைப்பு. இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கும்போதே கிளி ஒன்று அவளிருப்பிடம் வருகின்றது. அதனை நோக்கி, "ஒருவண்ணம் சென்று புக் (கு) எனக்கொன்(று) உரைஒண் கிளியே!”* (ஒருவண்ணம்-ஒருவிதமாக, ஒன்று . ஒரு சொல்; ஒண் அழகிய.) என்று வேண்டுகின்றாள். இதற்கு இரண்டு பொருள் கூறுவர் ஆன்றோர். இத்தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே, போர முதலிகளால் இருப்பர்; மேன்மேலெனப் பிரம்புகள் விழும். அதனைப் பொறுத்துப் போய் புகுங்கோள்' என்று அருளிச் செய்வர் பட்டர். அன்றிக்கே" வழி நெஞ்சை யபகரிக்கும் போக்யதையை யுடைத்து: அதிலே கால்தாழாதே வருந்தி ஒரு படி சென்று புகுங்கோள் என்பது பட்டருக்கு முன்புள்ளார் கூறுவது. ஈட்டில் கண்டுள்ள இந்த இரண்டு பொருள்களின் கருத்து வருமாறு : எம்பெருமான் செளசீல்யமே வடிவெடுத்தவ்னாயினும், சில 20. திருவாய் 4.7 : 3. 2l. ു. 6.! : 7.