பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 மலைநாட்டுத் திருப்பதிகள் இம்பும் தத்துவும் பாராட்டி நிற்பதும் உண்டு. அதற்கேற்ப அவனை நெருங்கவொண்ணாதபடி முதலிகள் பிரம்பும் கையுமாக நின்று கெடுபிடி செய்யவும் கூடும். அப்படி நேர்த்தாலும் அதனை ஒருவாறு சகித்துக் கொண்டு உள்ளே புகவேண்டும் என்பது முதற்பொருள். செக்கர் வேலைத் திருவண் வண்டுர் மலைநாட்டுத் திருப்பதி. ஆகவே, வழி யெல்லாம் நெஞ்சினைக் கொள்ளை கொள்ளும் பூவியல் பொழிலும் தடாகங்களும் ஆறுகளும் நிறைந்திருக்கும். அவற்றில் கண் செலுத்தினால் அவற்றை அதுபவிக்க வேண்டு மென்று மனம் சென்று பாயுமேயன்றி எம்பெருமானிடம் சென்று சேரமுடியாது. எனவே, வழியில் கண் செலுத்தாமல் ஒருஅன்று வதிவினைக் கடக்க வேண்டும் என்பது இரண்டாவது போருள். எம்பெருமஈனுடைய அடை பாளத்தையும், "கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால் செருஒண் சக்கரம் சங்குஅடை யாளம் திருத்தக்கண்டே'." கருவண்ணம்-கசிய நிறம் செய்ய-சிவந்த செரு-போர் இங்கே மாறுபாடு: திருந்தக்கண்டு - நன்கு பார்த்து) என்று குறிப்பிடுகின்றாள். ஆள்மாறாட்டம் ஏற்படுவதைத் தடுக்கவேண்டுமல்லவா? அடுத்து, ஆழ்வார்நாயகி தன் கண் வட்டத்தில் அகப் புட்ட நாகண்வாய்ப் புள்ளொன்றைக் கண்டு, "திருத்தக் கண்டுஎனக்கு ஒன்றுரை 2 திருவாய் 6, 1:1 23. டிெ. 6.1 * 8.