பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்வண்டும் தேவாதிதேவன் 133 (திருந்தக் கண்டு நன்நீர்கச் சேவித்து; ஒண் - அழகிய (கண்டு கொண்டிருக்க வேண்டும் அழகு), பூவை - நாகண வாய்ப் புள்.) - என்று விண்ணப்பிக்கின்றாள். திருவண்வண்டுர் பாம்பனை யப்பனுடைய திருமேனியின் அழகினை நன்றாகக் கண்டு மீண்டு வந்து தனக்கு உரைக்க வேண்டு மென்பது அவளது. வேண்டுகோள். ஒரு பொருளை இரண்டு விதமாகத் காணலாம் தன் மன்த்திற்கு மாத்திரம் தெரிந்தால் போதும் என்று காண்கை ஒன்று, பிறர்க்கும், விரிவாகக் கூறும் படியசக்க் காண்கை மற்றொன்று. பின்னதையே வேண்டு கின்றான் பிராங்குச் நாயகி. அந்தி எம்பெருமானை அடையாளம் கூறுவாள்போல், பெருந்தண் தாமரைக் கண்பெரு திண்முடி நாற்றடந்தோள் கருந்திண் மாமுகில் போல்திரு மேனி அடிகளையே' (தண் - குளிர்ந்த, நீள்முடி - நீண்ட திருமுடி; நால்நான்கு தடதோள் - விசாலமான தோன்; முகில் - மேகம்: அடிகள் - எம்பெருமான்.) என்று குறிப்பிடுகின்றான். இந்நிலையில் வேறு சில அன்னப் பறவைகள் அவளருகே வருகின்றன. அவற்றை நோக்கிப் பேசுவதான பாசுரம் இது: அடிகள் கைதொழுது அலர்மேல் அசையும் அன்னங்காள்: விடிவை சங்கொலிக் கும் திரு வண்வண்டுர்உறையும் 24. திருவாய் 5. 1:8,