பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#34 மலைநாட்டுத் திருப்பதிகள் கடிய மாயன்தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு கொடிய வல்வினை யேன்திறம் கூறுமின் வேறுகொண்டே' (அடிகள் - திருவடிகள்; அலர் - தாமரைப் பூ; விடிவு - விடியல்; திறம் - நிலை; வேறு கொண்டு - தனிமையில்.) திருவண்வண்டுர்ப் பெருமானிடம் சென்று அவன் கால்களைக் பிடித்துக் கொண்டு தனிமையில் தன் செய்தி கூற வேண்டும் என்பது ஆழ்வார்நாயகியின் வேண்டுகோள். காலைப்பிடித்துக் கொண்டால் அவன் மறுக்க முடியாத நிலையில் மாட்டிக்கொள்வான் என்பது அவள் நினைப்பு. அந்த எம்பெருமானோ அடியார்களின் பகைவர்களை அழியச் செய்வதில் கண் பாராத ஆச்சரியச் செயல் புரிபவனாதலால் கேடிய மாயன் என்கின்றாள். அடியார்கட்குக் கையாளாக நின்று தன்னையே கொடுக்கக் கூடியவனாதலால் கண்ணன் என்று குறிப்பிடுகின்றாள். இத்தனைச் செயல்களைப் புரிந்தாலும் அந்தோ ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று குறைபடும்படியான விய:மோகம் உடையனாதலால் நெடுமால்' என்று கூறுகின்றாள். இந்நிலையில் சில வண்டினங்கள் பறந்து வருகின்றன. அவற்றைத் தனிமையில் அழைத்துப் பேசுகின்றாள். பாசுரம் இது: வேறுகொண் டும்மை யான் இரந் தேன்வெறி வண்டினங்காள்: தேறுநீர்ப் பம்பை வடபா லைத்திரு வண்வண்டுர் மாறில் போரரக் கன்மதிள் நீறு எழச் செற்றுகந்த 23. திருவாய் 6, 1:19,