பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மலைநாட்டுத் திருப்பதிகள் குறி - அடையாளம்; வேறுகொண்டிருந்து - தனியிடத்தில் இருந்து, கழறல் - கூறுதல்.)

  • இணையவா றுரைசெயா

இனிதின்ஏ குதினனா வனையுமா மணி நன்மோ திரமளித்தறிஞtதின் வினையெலா முடிகெனா விடைகொடுத் துதவலும் புனையும்வார் கழலினான் அருளொடும் போயினான் (இணையவாறு - இவ்விதமாக வனையும் இழைத்துச் செய்யப் பெற்ற, அருள் - கருணை! என்ற கம்பராமாயணப் பாடல்களும் சிந்தித்து மகிழத் தக்கவை. இங்ங்ணம் ஆழ்வார் பாசுரங்களைச் சிந்தித்த வண்ணம் மண்டபத்தில் பொழுது போக்குகின்றோம். 罗西盘数 சரியாக மாலை ஐந்தரை மணிக்குக் கோயில் திருக்காப்பு நீக்கப்பெறுகின்றது. கோயில் சிறிய கோயிலாக இருப்பினும் மதிலுக்குப் புறத்தே விசாலமான இடம் உள்ளது. பெருந்திரளாக மக்கள் வந்து குழுமினாலும் அவர்களையெல்லாம் ஏற்கக் கூடிய இடம் அது. முன்னரே வந்து காத்துக் கிடக்கும் பக்தர்களுடன் நாமும் திருக் கோயிலினுள் நுழைகின்றோம். நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிய திருமுக மண்டலங் கொண்டு எழுந்தருளி யிருக்கும் பாம்பனையப்பனையும் கமலவல்லி காய்ச்சியாரையும் சேவிக்கின்றோம். நம்மையும் அறியாமல் ஆழ்வாருடைய பாசுரங்கள் மிடற்றொலியாக வெளிவருகின்றன. இத் திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுக்கும் அவனடியார் 28. டிெ நாடவிட்ட 73