பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருப்புலியூர் மாயப்பிரான் இlைணவ சமயத்தில் சிறப்பாகக் கொள்ளப்பெறும் மந்திரங்கள் மூன்று. அவை திருமந்திரம், துவயம், சரம சுலோகம் என்பவை. மோட்சத்தை விரும்புகின்றவர்கள் இந்த மூன்று மத்திரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும். இம் மூன்று மந்திரங்கள் சகல வேதசாரமான பொருள்களைத் தெரிவிப்பதாலும், இவற்றின் பெருமையை உணராதார் காதில் விழாதவாறு இவற்றை மறைக்க வேண்டியிருத் தலாலும் இவை இரகசியங்கள் (மறைகள்) என்னும் பெயரைப் பெற்றுள்ளன என்பது ஈண்டு அறியத்தகும். இம் மூன்று மந்திரங்களுள் முக்கியமானது திருமந்திரம். இதுவே முதலில் அறியத்தக்கது. இம் மந்திரமே ஆன்மாவின் உண்மைச் சொரூபம்' இன்னதென்பதையும், அந்நிலைக் கேற்பச் சேதந’ விடவேண்டுவன இவை என்பதையும் தெரிவிக்கின்றது. இவற்றை நன்கு அறிந்தவர்கட்கே உபாயத்தைக் கூறும் துவயத்திலும், பலனைக் கூறும் சர்ம சுலோகத்திலும் விருப்பம் ஏற்படும். ஆதலின் ஆன்மாவின் உண்மைத் தன்மையைத் தெரிவிக்கும் இத்திருமந்திரமே முதலில் அறியத் தகுந்த இரகசிய மாகின்றது. 1. ஆன்ம சொரூபம் உடலைக் காட்டிலும் வேறுபட்ட ஆன்மா தனக்கும் பிறருக்கும் உரிமையுட்ைய்தாயில்லாமல் ஈசுவரனுக்கே அடிமைப்பட்டதாய் (சே வு பூ த னா ய்) இருத்தல், * - 2. சேதநன் - அறிலுள்ளவன்.