பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புலியூர் மாயப்பிரான் 139 திருமந்திரத்தில் 'ஓம்' கம:’, ‘காராயணாய என்றும் மூன்று சொற்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் ஒம் என்ற பிரணவத்தின் பொருளையே மற்ற இருசொற்களும் நன்கு விரிவுபடுத்துகின்றன. இவ்விரு சொற்களின் பொருளையே துவயம் விரிக்கின்றது. துவயத்தின் பொருளையே சரம சுலோகம் விவரிக்கின்றது. இங்ங்னம் மூன்று மந்திரங்களும் ஒன்றையொன்று விரித்துரைக்கும் முறையில் அமைந் துள்ளன. இங்ங்னம் இவை விளக்கமாயிருக்கும் தன்மையை முமூட்சுப்படி என்னும் நூலில் கண்டு தெளியலாம். இந்தத் திருமந்திரத்தையே வேதங்களும் விரும்பின. விஷ்ணு காயத்ரி, பிைத்தரியோபநிடதம், மகோய கிடதம், சூபாலோ கிடதம் ஆகிய நூல்கள் இதனைச் சிறப்பித்துக் கூறுவதிலிருந்து இவ்வுண்மையை அறியலாம். அஷ்டாட்சர பிரம வித்யை, கருட புராணம், பாரதம் முதலிய நூல்களும் இந்த மந்திரத்தையே போற்றி யுரைப்பதனால் முனிவர் களும் இதனையே ஆதரித்துப் போந்தார்கள் என்று தெரி கின்றது. அருளிச் செயல்களும் நாராயண பதத்தையே பாராட்டிச் சொல்லுகின்றமையின், ஆழ்வார் பெருமக்களும் இதனையே விரும்பினர் என்பது வெள்ளிடை மலை. எம்பெருமானின் மேன்மையைக் காட்டிலும் அவனைக் குறிக்கும் திருநாமத்தின் மேன்மையே உயர்ந்ததாகும். இந் நாமத்திற்கு உரியவனாகச் சொல்லப்படும் எம்பெருமான் அருகிலின்றித் தொலைவிலிருப்பனும் அவனைப்பற்றியதாக வுள்ள இந்நாமம் தன்னைப் பக்தியுடன் சொன்னவர் களுடைய விருப்பங்களை முற்றுப்பெறச் செய்யும். இதனைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமின்றியே சொன்னாலும் தம் குழவிகட்கு இப்பெயரிட்டு அழைக்கினும், பரிகாச ாைகவோ, இழிவாகவோ, பொருளுணர்ச்சியின்றியோ