பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#40 மலைநாட்டுத் திருப்பதிகள் சொன்னாலும் அப்படிச் சொன்னவர்களைக் காப்பதினின்றும் தவறாது. சேததர் நிலைக்குத் தகுந்தவாறு அவரவர் விரும்பியவற்றையும் தருவதாகும். ‘குலம்தரும்; செல்வம் தந்திடும்; அடியார் படுதுய ராயின எல்லாம் நிலந்தரஞ் செய்யும்; நீள்விசும்பு அருளும்; அருளொடு பெருநிலம் அளிக்கும்; வலந்தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற தாயினும் ஆயின செய்யும்; நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராய னாஎன்னும் நாமம்' - |குலம் - உயர்குலம்; நிலம்தரம் - தரைமட்டம்: பெரு நிலம் - பரமபதம்; வலம் - ஆற்றல்.) என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரத்தால் இம்மந்திரத்தின் ஆற்றலை அறியலாம். இம்மந்திரத்தின் மூன்று சொற்களும் மூன்று பொருள் களைக் குறிக்கின்றன. இவற்றுள் முதற் சொல்லாகிய பிரணவம் சேதனுடைய சேஷத்துவத்தையும் (அடிமை நிலையையும்), இரண்டாவது சொல்லாகிய நம : பாரதத் திரியத்தையும், மூன்றாவது சொல்லாகிய நாராயணாய என்பது சேதநன் ஈசுவரனுக்குப் புரிய வேண்டிய கைங் கரியத்தையும் தெரிவிக்கின்றன. பிரணவ மாகிய ஓம்’ என்ற சொல்லும் அ, உ, ம. என்ற மூன்று எழுத்துகளைக் கொண்டது. இம்மூன்று எழுத்துக் களும் மூன்று பொருள்களைத் தெரிவிக்கும். அகாரம் பகவானையும், அதில் ஏறி மறைந்துள்ள வேற்றுமை சேஷத்துவத்தையும், உகாரம் அந்தச் சேஷத்துவத்தின் 3. பெரி. திரு. 11:9