பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புலியூர் மாயப்பிரான் 141 அநந்யார்ஹத்துவத்தையும' மகாரம் ஞானவானாகிய சீவனையும் தெரிவிக்கின்றன. இவற்றின் விரிவுகளை உரிய நூல்களில் கண்டு தெளியலாம். பகவானைப்பற்றிக் கூறும் நூல்களில் திருவாய்மொழி யும் ஒன்று. இது திருமாலவன் கவி' என்றும் சிறப்பிக்கப் பெறும். இந்நூலில் நம்மாழ்வார் பகவானை நூறு பதிகங் களால் அதுபவித்து இனியராகின்றார். இவற்றுள் 73 பதிகங்கள் ஆழ்வார் தாமான தன்மையில் பேசினவை; 27 பதிகங்கள் பெண் பாவனையில் பேசினவை. பெண் நிலை யிலிருந்து பேசினவற்றுள்ளும் மூன்று வகுப்புகளுண்டு. மகள் பாவனையில் பேசினவை பதினேழு பதிகங்கள்; தாய் பாவனையில் பேசினவை ஏழு பதிகங்கள்; தோழி பாவனை யில் பேசினவை மூன்று பதிகங்கள். இறுதியாகக் குறிப்பிட்ட மூன்று பதிகங்களிலும் பிரணவத்தில் உகாரத்தின் பொருளான அநந்யார்ஹத்துவம் வெளியிடப்படுவதாக ஆன்றோர்கள் குறித்துள்ளனர். இவற்றுள் திருப்புலியூர் எம்பெருமான்மீதுள்ள பாசுரங்கள் தோழி அறத்தொடு நிற்றல் என்ற அகப்பொருள் துறையில் அமைந்துள்ளன. அறத்தொடு நிற்றல் என்பது என்ன? அதாவது, தானும் தலைமகளும் இதுகாறும் அறத்தொடு பொருந்தவே நடந்திருப்பதாகத் தோழி காட்டி நிற்றலே இது. அறம் என்பதை ஈண்டு முறை, தக்கது என்று கொள்ளல் வேண்டும். இறையனார் கள்வியலுரையாசிரியரும், அறம் என்பது. தக்கது. தக்கதனைச் சொல்லி நிற்றல் தோழிக்கும் உரித் தென்றவாறு; அல்லது உம், பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு, கற்பின் தலை நிற்றல் என்பது உமாம்' என்று உரைத் 4. அநந்யார்ஹத்துவம். வேெ றாருவருக்கும் அல்லாமல் திசுவரன் ஒருவனுக்கே உரித்தாயிருத்தில். . 5. இறை. கள். நூற்பா 23 வ்ரை காண்க)