பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம்

செடியாய வல்வினைகள்

தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! கின்கோயி வின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்துஇயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.” -குலசேகராழ்வா அனைத்தும் நடைபெறுவதற்கு ஆண்டவன் அருளே காரணம் என்பது நம் முன்னோர் கண்ட அநுபவம்; நம் அநுபவமும் அதுவே. கடந்த ஆறாண்டுகளாக நாலா யிரத்தை ஆய்ந்ததும், அதில் அநுபவத்தைப் பெற்றதும் அவன் அருளாலேயே என்பதை நன்கு உணர்கின்றேன். அதனையொட்டி ஆழ்வார்கள் அநுபவித்த 108 திருப்பதி களையும் யானும் அநுபவிக்க வேண்டும் என்ற அவர் என்னிடம் எழுந்ததும் அவன் அருளாலேதான். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்பது மணிவாசகர் கூறும் அநுபவம் அன்றோ? 1969-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் என் துணையாருடனும் என் மக்கள் இருவருடனும் மலைநாட்டுத் திவ்விய தேச யாத்திரை தொடங்கினேன். ஆழ்வார்களால், குறிப்பாக 4. பெரு.திரு 4 : 9 5. திருவா.சிவபு. அடி 18.