பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi நம்மாழ்வாரால் மங்காசாசனம் செய்யப் பெற்ற ສr? பெருமான்களைக் கண்ணாரக் கண்டு வாயார அவன் புகழ் பாடிச் சேவித்தோம். யான் பெற்ற அநுபவத்தைக் கட்டுரை களாக வடித்துத் தந்தால் பலருக்கும் பயன் படும் என்று சில நண்பர்கள் என்னைத் தூண்டினர். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பது திருமூலரின் திருவாக் கன்றோ?

  • என்சொல்லால் பான்சொன் ன

இன்கவி என்பித்துத் தன்சொல்லால் தான்தன்னைக் கீர்த்தித்த மாயன்' என்று நம்மாழ்வார் குறிப்பிட்ட அந்த மாயனே என்னை இயக்கி இக்கட்டுரைகளை வரையத் திருவருள் புரிந்தனன் என்பது என் நம்பிக்கை. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பெற்ற மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றும் நான்கு பிரிவு களாக அமைந்துள்ளன. திருவண்பரிசாரம். திருவாட்டாறு, திருவனந்தபுரம் இம்மூன்றும் ஓரிடப் பிரிவு {1, 2, 3): திருவாறன்விளை, திருச்சிற்றாறு, திருக்கடித்தானம், திருவல்லவாழ், திருவண் வண்டுர், திருப்புலியூர் இந்த ஆறும் மற்றொரு பிரிவு (4, 5, 6, 7, 8, 9); திருக்காட்கரையும் திருமூழிக்களமும் வேறொரு பிரிவு (10, 11); திருவித்துவக் கோடும் திருநாவாயும் பிறிதொரு பிரிவு (12, 13). இந்த நான்கு பிரிவுகளிலும் மங்களாசாசனம் செய்தருளினவர் நம்மாழ்வார்; மூன்று பிரிவுகளில் பாடிச் சிறப்பித்தவர் திருமங்கையாழ்வார்; ஒரு பிரிவில் மட்டிலும் போற்றி யுரைத்தவர் குலசேகரப்பெருமாள். இந்தப் பதின்மூன்று கட்டுரைகளிலும் ஆழ்வார்களின் பக்தியுணர்ச்சியின் கொடுமுடிகளைக் காணலாம். சில 6. திருமந். 5ே. 7. திருவாய் 7.9:2