பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii இடங்களில் சுட்டப்பெற்றுள்ள எடுத்துக் காட்டுகளால் பாசுரத்தின் சொல்வளத்தையும், உரையின் நயத்தினையும் உணரலாம். பக்தி இலக்கியத்தில் அகப்பொருள் துறைகள் அமைந்துள்ள சிறப்பைக் கண்டு சுவைக்கலாம். எல்லாக் கட்டுரைகளிலுமே ஆசாரிய ஹிருதயத்தின்’ நாடி. துடிப்பதனை அறியலாம். இக்கட்டுரைகளைப் படிப் போரிடையே வைணவ இலக்கியத்தின்பால் அவாவினை எழுப்பிவிட்டால் அதுவே என் சிறிய முயற்சிக்குக் கிடைக்கும் பரிசாகக் கருதி மகிழ்வேன். மேற்குறிப்பிட்ட திருக்கோயில்களில் இரண்டாவது பிரிவிலுள்ளவற்றைப் பார்ப்பதில் சிறிது சிரமத்தால் மயங்கினேன். அப்போது என் கெழுதகை நண்பர் திரு. வீ. திருவேங்கட ரெட்டியார் அவர்கள் பி.ஏ., பி.எல்., உரிமையாளர், சீமாட்டி ஹால், கோட்டயம் எங்களை விருந்தினராக ஏற்றுக் கொண்டு கார் வசதியை நல்கினார். அதனால் இந்த ஆறு திவ்விய தேசங்களுக்கும் எளிதாகப் போய்வர முடிந்தது. இந்த வசதிகள் அளித்த நண்பர் அவர்கட்கு என் நன்றியை புலப்படுத்துகின்றேன். இந்நூலிலுள்ள 2, 11, 12 எண்ணுள்ள கட்டுரைகள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தார் வெளியிடும் சப்தகிரி என்ற திங்கள் இதழ்களில் வெளி வந்தவை. 10 எண்ணுள்ள கட்டுரை பொள்ளாச்சி வரதராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்குவிழா மலரில் வெளிவந்தது.1எண்ணுள்ள கட்டுரை பெங்களுர்-ஜயநகர் அரங்கமன்னார் ஆண்டாள் ஆலயக் குடமுழுக்கு விழா மலரில் வெளிவந்தது. இவற்றை வெளியிட்ட அந்தந்த இதழாசிரியர்கட்கு என் நன்றி. இந்நூலை யான் எழுதி வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக் கும் (Syndicate), சிறப்பாகப் பல்கலைக் கழகத்தைத்