பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X劃 திறம்பட இயக்கி வரும் அதன் துணைவேந்தர் டாக்டர் டி ஜகக்காத ரெட்டி அவர்கட்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். காலத்திற்கேற்ற நூல்களை, சிறப்பாக பக்தி நூல்களை வெளியிட்டுச் சிறந்த முறையில் தமிழ்ப் பணியாற்றி வருபவர்கள் எஸ் ஆர். சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகத்தார். என் அரிய நண்பர் திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களுடைய வேங்கடம் முதல் குமரி வரை (4 பகுதிகள்) என்ற நூலை வெணியிட்டு தமிழ் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர்கள். இந்த நூலையும் மனமுவந்து ஏற்று வெளியிட்டமைக்கு அவர்கட்கும்,அவர்களுடைய சென்னைக் கிளையைச் சிறந்த முறையில் செயற்படச் செய்து வரும் கந்தன் அடிமை திரு. எஸ்.பி. சண்முகம் பிள்ளை அவர்கட்கும் என் மனமுவந்த நன்றியறிதலைப் புலப்படுத்துகின்றேன். சென்னை உயர்நீதி மன்றத்து நீதிபதி எஸ். மகராஜன் அவர்கள் என் நெடுநாளைய நண்பர்ரேஸிகமணி டி.கே.சி.யின் முதன்மையான் சீடர்; ஆங்கிலம் படித்த அன்பர்களிடையே யும் தமிழ்ச் சுவையூட்டி அவர்களையும் தமிழன்பர்களையும் தமிழ்ச் சுவைஞர்களாக மாற்றிய பெருமை இவருக்குநிறைய உண்டு. இவருடைய பேச்சிலும் எழுத்திலும் இவருடைய உயிர் நாடி பேசும்; கவிதைகளின் நாடிநரம்புகளைச் சுண்டிப் பார்த்து நமக்கு அவற்றின் துடிப்புக்களைத் தெளிவாக எடுத்துக்காட்டும் அற்புத ஆற்றல் இயல்பாக அமைந்த மேதை இவர். இத்தனைக்கும் மேலாக பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்' என்ற வள்ளுவத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் உயர்குண ச் செம்மல். இறையன்பிலும் தத்துவக் கருத்துகளிலும் திளைக்கும் இப்பெரியாரின் அணிந்துரை இந்நூலின் பெருமையை உயர்த்துகின்றது என்பது என் நம்பிக்கை. அணிந்துரை அருளிய அன்பருக்கு என் இதயம் நிறைந்த நன்றி என்றும் உரியது. 8. குறள்-996