பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புலியூர் ம்ாயப்பிரான் 143 பற்றி அஞ்சும் பொழுதும் தோழி அறத்தொடு நிற்பாள். தொல்காப்பியர் இதனை ஏழுவகையாக நிகழும் என்பர்." பிறிதோரிடத்திலும் தலைவியின் மாறுபாட்டைக் குறித்துச் செவிலி அறிவரை வினாவி குறிபார்க்கும் இடத்திலும், வேலனைக் கொண்டு வெறியாடும் பொழுதும், பிறர் வரைவு வந்துழியும், தலைவனது வரைவு மறுத்த வழியும் அறத் தொடுநிலை வகையால் தலைவற்கும் தலைமகட்கும், தனக்கும், குலத்திற்கும் குற்றம் ஏற்படாதவாறு குற்றம் தீர்ந்த கிளவியைத் தாய்மாட்டு நிரம்பச் சொல்லாது தோற்றுவாய் செய்வாள் என்று குறிப்பிடுவர்.” இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் பேருந்து மூலம் குட்டநாட்டுத் திருப்புவியூரை அடைகின்றோம். ஊர் இயற்கைச் சூழலில் அழகுற அமைந்துள்ளது. ஊர் சுற்றிலும் வயல் சூழ்ந்துள்ளது. "செழுநீர் வயல் குட்ட நாட்டுத் திருப்புலியூர்' என்பது நம்மாழ்வார் திருவாக்கு. இந்தத் திருப்பதி எம்பெருமானை நம்மாழ்வார் மட்டிலும் ஒரு திருவாய்மொழியால் மங்களா சாசனம் செய்துள்ளார். புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்திருப்பதை ஆழ்வார் புன்னை அம்பொழில் சூழ் திருப்புலியூர்' என்று சிறப்பித்துள்ளார். சோலையும் வயலும் சூழ்ந்துள்ளமையை, ஊர்வ ளம்கிளர் சோலையும் கரும்பும்பெருஞ் செந்நெலும் சூழ்ந்து 8. தொல்-பொருளதி-பொருளியல், 102. 9. டிெ-களவியல்,24. 10. திருவாய். 8.9 : 1. 11. டிெ8.9. 12. டிெ8.9 : 2.