பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புலியூர் மாயப்பிரான் 147 ஒலி கடல் ஒலிபோல் நிலைபெற்று ஒலித்துக் கொண் டிருக்குமாம். விரவார் இசைமறை வேதியர் ஒலி வேலை யின் நின்றொலிப்ப' என்ற பாசுரச் சொற்றொடரால் இதனை அறிகின்றோம். இந்த எண்ணங்கள் மனத்தில் அலையிட்ட வண்ணம் திருக்கோயிலுக்கு வருகின்றோம். இத்திருப்பதி எம்பெருமான்மீது நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளியுள்ள திருவாய்மொழியைச் சிந்திக்கின்றோம். இந்தத் திருவாய்மொழி தோழியின் பாசுரமாகச் செல்லு கின்றது. திருவாய் மொழியில் தோழிப் பாசுரமாக வரும் பதிகங்கள் மூன்று.”. இம்மூன்று பதிகங்களும் பிரணவத்தில் உள்ள உகாரத்தின் பொருளான அநந்யார்ஹத்துவம் (எம்பெருமானைத் தவிர வேறு ஒருவருக்கும் உரியதல்லாத தன்மை) வெளியிடப்பெறுகின்றது என்பதை நாம் அறிவோம். ஆன்மாக்கள் யாவும் பரமபதநாதனுக்கே அடிமை என்பதையும் உணர்வோம். இந்தத் திருவாய் மொழியில் தோழிப் பாசுரம் செல்லும் முறையை நினைத்துப் பார்க்கின்றோம். பராங்குச நாயகி வயது முதிர்ந்து மங்கைப் பருவம் அடைகின்றாள். கணவனை நாடி அடைய வேண்டிய வயதல்லவா இது? திருப்புலியூர் எம்பெருமானுடன் இயற்கைப் புணர்ச்சியும் நடைபெற்று விடுகின்றது. தலைவி யின் உயிர்த்தோழியானவள் தலைவியின் உருவ வேறு பாட்டாலும் சொற்களின் வேறுபாட்டாலும் புணர்ச்சி உண்டானமையை ஒருவாறு அறிகின்றாள். தன் மகளின் உண்மைநிலையை அறியாத தாய் தந்தையர் இவளுடைய திருமணத்தை நிச்சயித்து மனமுரசும் அறைவிக்கின்றனர். இதனை அறிந்த தோழி மனங்கவல்கின்றாள். பரதனே 20. திருவாய் 8.9 : 9 21. ു 4.6 5.5; 8.9