பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 மலைநாட்டுத் திருப்பதிகள் என்று குறிப்பிடுகின்றாள். இந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தவண்ணம் 'தென்றிசைத் திலதம்புரைக் குட்ட நாட்டுத் திருப்புலியூருக்குள்’’’ நுழைகின்றோம். நம்மாழ்வார் காலத்தில் இந்த திருப்பதி அழகிய நீண்ட மாடங்கள் உயர்ந்து தோன்றுவதாய் இருந்தது. இதனை ஆழ்வார் 'திகழும் மணி நெடுமாடம் நீடு திருப்புலியூர்' என்று குறிப்பிடுவர். இன்றும் அந்த ஊரில் சிறியனவும் பெரியனவுமாகவுள்ள பல்வேறு மாட மாளிகைகளைக் காணத்தான் செய்கின்றோம். இன்று அந்த ஊரில் அதிகக் கிறித்தவர்கள் வாழ்கின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் செல்வச் செழிப்புள்ள அந்தனோத்தமர்கள் எண்ணற்றவர் கள் அவ்வூரில் வாழ்ந்து வந்ததாக அறியக் கிடக்கின்றது. அவர்கள் யாகங்கள் செய்யும்போது யாக குண்டங் களினின்றும் புகை சென்று விசும்பிலுள்ள உம்பர் உலகத்தை யும் மறைக்குமாம். இதனை ஆழ்வார், "மல்லைச் செல்வம் வடமொழி மறைவானர் வேள்வியுள் நெல்அழல் வான்புகை போய்த் திடவிசும்பில் அமரர் நாட்டை மற்ைக்கும் தண்திருப்புலியூர்" (மல்லைச் செல்வம் - அதிகச் செல்வம்; நெய்அழல் - தெய்யால் எரியும் நெருப்பு; வான்புகை மிக்க புகை; விசும்பு. ஆகாயம்; அமரர் - தேவர்.) என்று குறிப்பிடுவதனால் அறியலாகும். வடமொழி மறைவாணர்களாகிய இந்த அந்தணர்கள் இதும் சாம வேத 17. திருவாய், 8.9 : 1.0 18. டிெ 8.9 : 3 19. டிெ 8.9 : 8