பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புலியூர் மாயப்பிரான் 145. நிறைந்திருப்பதைப் பார்க்கலாம். வெற்றிலைபோடும் பழக்கம் உள்ளவர்கட்கு இவற்றைப் பார்க்கும்பொழுதே நாக்கில் நீர் சுரக்கும்; அவற்றைப் பறித்து மெல்ல வேண்டும் என்ற தினவும் நாக்கில் ஏற்படும் என்று கூறுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்த வெற்றிலைக் கொடிகள் அருகிலுள்ள அடியுரத்தையுடைய பாக்கு மரத்தைத் தழுவி அணைத்துக் கொண்டிருப்பதை கண்டு களிக்கலாம். மலை நாடு நேந்திரம் என்ற வகை வாழைப்பழத்திற்குப் பெயர் போனது. அதனை மலைநாட்டு மக்கள் முக்கிய உணவாகவும் கொள்கின்றனர். அந்த வகை வாழைமரங்கள் செறிந்த இலைகளையும் மடல்களையும் கொண்டு தோட்டங்களை அணி செய்கின்றன. அந்த வாழைகளில் பழக்குலைகள் தொங்கிக் கொண்டிருப்பதையும், அப்பழங்களின் மனம் எங்கும் வீசிக் கொண்டிருப்பதையும் காண்கின்றோம். சில இடங்களில் செவ்வாழையும் செறிந்து காணப்படும். இந்தச் சோலைகளில் தென்னை மரங்கள் செறிந்து இருப்பதையும் காண்கின்றோம். இந்தத் தென்னை மரங்களின் செறிந்த ஒலைகளினுடே தென்றற் காற்று உலவிச் சூழ்நிலையை இன்பகரமாக்குகின்றது. இதனை ஆழ்வார்நாயகி, மெல்லிலைச் செல்வ வண்கொடிப் புல்க வீங்கிளம் தாழ்கமுகின் மல்லிலை மடல்வாழை ஈன்கனி சூழ்ந்து மணங் கமழ்ந்து புல்லிலைத் தேங்கி னுாடு கால் உலவும் தண் திருப்புலியூர்' " இலைச் செல்வம் - இலையின் வளப்பம், வண்கொடி. அழகிய கொடி புல்க தழுவ, தாள் - அடி; மல் - பெரிய, புல்இலைத்தேங்கு ஒலைகளையுடைய புல்லாகிய தென்னை மரம், கால் - காற்று.1 - 16 திருவாய். 8.9 7