பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மலைநாட்டுத் கிருப்பதிகள் அரசன் என்று அறைவித்த முரசொலி செவிப்பட்டபோது பரதாழ்வான் எங்கினம் மனக்கிலேசம் அடைந்தானோ அங்ஙனமே தோழி இப்போது துயர் அடைகின்றாள் இவ்வாறு சிந்திக்கின்றாள், “மானிடவர்க்கென்று பேச்சுப் படில், வாழகில்லேன்' என்று கூறியவள் இவள். 'அன்றிப் பின் மற்றொருவர்க்கென்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலையெம் மாயற் கல்லால்’’’ என்ற பிடிவாதத்தைப் பிடிக்கின்றவள். மாறாக ஏதேனும் நடைபெற்றால் இவள் உயிர் தரியாள். அப்படி நடைபெறுவதை எப்படியாயினும் தடுத்தேயாக வேண்டும். அங்ங்னம் செய்ய முயலுங்கால் திருப்புலியூர் நாயனாருடன் புணர்ச்சி உண்டானமையை அறிவிப்பின், அஃது என் காவற் சோர்வாலே நிகழ்ந்தது என்று ஏற்பட்டுவிடும். அறிவியாது ஒழியில் இவள் வாழாள். இந்நிலையில் செய்யவேண்டியது என்ன?” என்பதாக தோழி இங்ங்ணம் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது தலைவியின் பெற்றோரும் மற்றோரும் தலைவியின் வடிவ வேறுபாட்டிற்குக் காரணம் யாதாக இருக்குமோ என்று ஆராயும் நிலையைக் காண்கின்றாள். தானும் அவர்களுடன் ஆராய்வதாகச் சேர்ந்துகொண்டு இதனை விலக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றாள். அந்த முறையைக் கூறுவதாக அமைந்ததே இத்திருவாய்மொழி. இதுவே அகப்பொருள் லார் குறிப்பிடும் அறத்தொடு நிற்றல்' என்பதாகும். திருப்பதி எம்பெருமான் மீதுள்ள திருவாய்மொழி னையே கூறுகின்றது. 22. நாச். திரு 5 23. பெரியாழ் திரு. 3,4, 5 24. அறத்தொடு நிற்றல்-தக்கதனைச் சொல்லி நிற்றல் என்றவாறு-அறம்-தக்கது. அன்றிக்கே, பெண்டிர்க்கு அறம் என்பது கற்பு; கற்பின்தலை நிற்றல் என்னலுமாம்.