பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புலியூர் மாயப்பிரான் f 49 தோழி முதலில் இவ்வாறு தொடங்குகின்றாள்: "கருமா னிக்க மலைமேல் மணித் தடந்தாமரைக் காடுகள்போல், திருமார்வு வாய்கண்கை யுத்தி காலுடை யாடைகள் செய்யபிரான் திருமால் எம்மான் செழுநீர் வயல் குட்டநாட்டுத் திருபுலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னைeரிதற் கென்செய்கேனோ' (மணித்தடம்-தெளிந்த தடாகம்; உந்தி-கொப்பூழ்; கால்-திருவடி ஆடை-தரித்திருக்கும்; செய்ய ஆடைகள் எனக் கூட்டுக: பேர்-திருநாமம்.) - - என்பது பாசுரம், எம்பெருமானின் திவ்விய அவயவங்களின் அழகினைக் கண்டு அவ்வடிவழகு அல்லது மற்றொன்று அறியாதபடி ஈடுபட்டாள் என்று தாய்மார்க்கு உரைக்கின் றாள். அநுபவிப்பார் நெஞ்சு குளிரும்படி கருமையுடைய தாய், பிரகாசத்தால் மிக்கு இருப்பதாய், தனக்குமேல் ஒன்று இல்லாததான இனிமை யுடையதாய் இருப்பது ஒரு மலை மேலே என்ற கருத்துத் தோன்ற கருமாணிக்க மலை மேல்.’ என்கின்றாள். இத்தகைய ஒரு மலைமீது தெளிந்த ஒரு தடாகம் தாமரைக் காடுகள் பூத்ததுபோல் எம்மெருமான் எழில் நீலமேனியில் திருமார்பு, திருவதரம், திருக்கண்கள், திருக்கைகள், திருஉந்தி, திருவடிகள் முதலிய உறுப்புகள் அமைந்துள்ளன என்பது தோன்ற மணித்தடம் ,..., ஆடைகள் செய்ய பிரான்’ என்கிறாள். பக்தர்கட்குப் பற்றுக் கோடாகவுள்ள பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கும் திருமார்பாதலால் அது சிவந்து காணப்பெறுகின்றது. அப் பிராட்டிவழியால் உறவு செய்தார்க்கு அநுகூலமான சொற் 25 திருவாய்; 88 ; ; ,