பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ió2 மலைநாட்டுத் திருப்பதிகள் தொல்காப்பியம்' அவனைக் குறிப்பிடுகின்றதன்றோ? முருகனும் திருமால் மருகன் அன்றோ? ஆகவே, திருமாலும் அழகான இடங்களில்தான் கோயில் கொண்டுள்ளார் என்பதைக் காண்கின்றோம். இத்தகைய அழகான இடங் களில் பூவைப்பூ, காயாம்பூ நீலோற்பலம், செங்கழுநீர்ப்பூ இவை மலர்ந்து காட்சி அளிக்கின்றன. இந்தப் பூக்களைக் கண்டதும் நம்மாழ்வாரின் உயிரும் உடம்பும் ஒருங்கே மலர்ச்சி பெற்றுப் பூரித்துப் போகின்றன. அந்த உணர்ச்சி. 'பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலர்என்றும் காண்தொறும்,-பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று.'" (பூவை - ஒருவகை மலர் காவி - செங்கழுநீர்ப்பூ, ஆவி . உயிர் மெய் உடல்: பூரிக்கும் - பருத்து வளரும்.) என்ற பாட்டாக வடிவம் பெறுகின்றது. எம்பெரும்ானுடைய திவ்வியமங்கள வடிவம்தான் இப்படி வந்து காட்சி தருகின்றது. இது வெறும் பிரமையே என்று தோன்றினாலும் அறிவு எச்சரித்தாலும், ஆழ்வாரது பக்திக் கண்கட்கு அவை அப்படியே தென்படுகின்றன; அறிவின் எச்சரிக்கையையும் புறக்கணித்து பிரமையே மேல் என்று அவரது உணர்ச்சி துண்டுவதால் அந்தப் பிரமையிலேயே அவரது உள்ளம் தோய்ந்து ஒன்றி நின்று பேரின்பத்தை அடைகின்றார் ஆழ்வார். திருக்காட்கரை என்ற திவ்வியதேசமும் இத்தகைய இயற்கையழகு மிக்க சூழலில்தான் அமைந்துள்ளது. இத் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை ஒரு திருவாய்மொழியில் மங்களா சாசனம் செய்துள்ளார். ந ம் மா ழ் வார் . வேறு எந்த ஆழ்வாரும் இந்த 6. பெரி திருவந்-73