பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காட்கரை அப்பன் 161 பள்ளத் தாக்குகள், மைதானங்கள், வயல்கள், சோலைகள் ஆகியவை அடங்கிய பகுதிகளும்; மற்றொரு புறம் முடி மன்ன்ர்போலச் செருக்குடன்நிமிர்ந்துள்ள உன்னதசிகரங்கள், அருவிகள், பீடபூமிகள், காயல்களாக விரியும் ஆறுகள் ஆகியவை அடங்கிய பகுதிகளும் அவர் கண்களுக்குப் புலனாகும். மேலும், ஆங்கே இயற்கை நியதிகட்குக் கட்டுப் பட்டும், இயற்கை நியதிகளைக் கட்டுப்படுத்தியும் ஆடம்பர மற்ற வாழ்க்கை நடத்தும் மக்கள் திரள்களையும் காணலாம். கேரளத்தில் தென்னிந்திய இருப்பூர்தி வழியில் அமைந்துள்ள எர்ணாகுளம் என்ற நிலையத்தில் இறங்கு கின்றோம். அவரவர் வசதிப்படி சத்திரம், வாடகை விடுதி ஆகிய இடங்களில் தங்கி நெடுந்தொலைவுப் பயணத்தின் சிரமத்தைப் போக்கிக் கொள்கின்றோம். நீராடித் தூய ஆடையை உடுத்திக்கொண்டு திருக்காட்கரைக்குப் போகச் சித்தமாகின்றோம், எர்ணாகுளத்திலிருந்து சுமார் பத்துக்கல் தொலைவிலுள்ளது இந்த திவ்விய தேசம். அங்கு போகப் பேருந்து (Bus) வசதி உண்டு. சாலையின் மேலேயே இவ்வூர் அமைந்துள்ளது. பேருந்திற்கு அறுபது காசு தந்து அவ்வூரை அடைகின்றோம். பேருந்தில் செல்லும்போதே சாலைக்கு இருமருங்கும் உள்ள தோப்புகள், சோலைகள், வயல்கள் இவற்றைக் கண்டு களித்துக்கொண்டே செல்லுகின்றோம். எங்கெல்லாம் எழில் கொழித்து நிற்கின்றதோ அங்கங்கெல்லாம் தமிழ்க் கடவுள் முருகன் எழுந்தருளியிருப்பான் என்பது தமிழரது சமயக் கொள்கை. திரு. வி.க.வின் 'முருகன் அல்லது அழகு’’ என்ற நூலில் இது விளக்கப்பெற்றிருப்பதைப் படித்து மகிழலாம். மாயோனும் (திருமாலும்) தமிழ்க் கடவுள் தானே? “மாயோன் மேய காடுறை உலகமும்'" என்று 5. தொல், பொருள் ஆகத்திணை-5 ~łł~~