பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 மலைநாட்டுத் திருப்பதிகள் வன்மை புடைய அரக்கர் அசுரரை மாளப் பொருத நன்மை புடையவன் சீர்பர வப்பெற்ற நான்ஒர் குறைவிலனே' இதில் திருவருள் காரணமாக அடியார் பொருட்டுவந்து பல பிறவி எடுக்கும் சீலகுணம் (செளசீல்யம்) ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும் அரும்பினாற் போலே எம் பெருமான் திவ்யாயுதங்களைத் தரித்திருக்கும் அழகு ஆகியவற்றில் நம்மாழ்வார் ஈடுபட்டு மகிழ்வதைப் பாசுரத்தில் காணலாம், "நன்மையுடையவன் சீர் பரவப்பெறுவதில்' ஆனந்தம் அடைகின்றார் ஆழ்வார். மேலும், சிலர் இறைவன் கோயில் கொண்டருளின திவ்விய தேசங்களின் வளங்களைப் பேசியும், அவ்விடங்களில் அபிமானமுள்ள வைணவர்களின் பெருமையைப் பேசியும் அநுபவிப்பர். இன்று திருக்காட்கரை என்ற திவ்விய தேசத்திற்குச் சென்று திருக்காட்கரை அப்பனைச் சேவிப்போம். நம்மாழ்வாரின் துணைகொண்டு அந்த அப்பனின் குணங்களில் ஈடுபடுவோம். இயற்கை வனப்புகளும் வளங்களும் நிறைந்த கருவூல மாகத் திகழ்வது மலைநாடு'; அஃதாவது, இன்று கேரளகாடு என்று வழங்கும் பகுதியாகும் இது. மலைத் தொடர்களால் அமைந்த இப்பகுதி மேற்கு முகமாகக்கடல் வரையிலும் சரிந்து கிடக்கின்றது. உயர்ந்த கொடுமுடி ஒன்றிலிருந்துகொண்டு ஒருவர் மேற்குத் திரும்பி நின்று இப்பகுதியை நோக்குவாராயின் ஒருபுறம் அடர்ந்த காடுகளும் குன்றுகளும், தென்னந்தோப்புகளும் கமுகந் தோட்டங் களும், பிறிதொரு புறம் அராபியக் கதைகளில் வரும் அதிசயங்களைப் போன்று அடுக்கடுக்காக வரும் பசுமையான 4. திருவாய் 3. 10 !