பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருக்காட்களை அப்பன் இறைவனுடைய அடியார்கள் இறைவனை அதுப வித்தல் பல்வேறு வகையாக நிகழும். சிலர் அவனுடைய திருநாமங்களைச் சொல்லி அதுபவிப்பர்; சகஸ்ர நாம அர்ச்சனை’ இம் முறையினின்றே எழுந்தது என்று கருதலாம். சிலர் அவனுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிச் சொல்லி அநுபவிப்பர். எடுத்துக்காட்டாக இறைவனுடைய எளிமைக் குணத்தில் (செளலப்யம்) நம்மாழ்வார் எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே' என்று ஈடுபட்டு அதனால் தன்னையே மறந்து ஆறு மாதம் மோகித்துக் கிடந்தார் என்ற செய்தியை உரையாசிரியர்கள் குறித்துள்ளனர். இந்தக் குணம் எல்லா ஆழ்வார்களின் .ெ ந ஞ் ைச யு ம் உருக்கியுள்ளது. எம் பெருமானின் எளிமையையும் உயர்வையும் (பரத்துவம்) இரண்டு பெண்கள் எதிரெதிராகக் கூறும் பாவனையில் திருமங்கையாழ்வார் பேசும் பாசுரங்களை” இதற்கு எடுத்து காட்டுகளாகக் கொள்ளலாம். இன்னும் சிலர் இறைவ னுடைய வடிவழகை வருணித்துப் பேரின்பம் கொள்வர். 'சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம்வில் ஒண்மையுடைய உலக்கை ஒள்வாள் தண்டுகொண்டு புள்ளுர்ந்து உலகில் 1. திருவாய் . 3 : 1. 2. டிெ 1, 3 1, 5, 10 : ( ஈட்டின் தமிழாக்கம்') என்ற நூலில் காண்க) 3. பெரி. திரு, 11.5