பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மலைநாட்டுத் திருப்பதிகள் பெருமித உணர்வினையும் பெறுகின்றோம். இந்நிலையில் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் இத்திருப்பதி பற்றிய பாசுரமும் நினைவிற்கு வருகின்றது. 'முதல்வண்ணம் ஆமே முலைவண்ணம்; முன்னை விதிவண்ணம் நீங்கி விடுமே-சதுரத் திருப்புலியூர் நின்றான் திருத்தண் துழாயின் மருப்புலிஜஹர் தென்றல் ஆரின்.' என்ற பாசுரத்தையும் ஓதி உளங் கரைகின்றோம். இந்தப் பாசுரமும் ஒரு பெண் பேச்சாகவே அமைந்திருக்கும் நேர்த்தியையும் நினைந்துப் பார்க்கின்றோம். - இந்தத் திருப்பதி எம்பெருமானிடம் விளங்கும் குணத்தைப்பற்றி ஆசாரிய ஹிருதயம், 'அவகாஹித்தாரை அநந்யார்ஹம் , ஆக்கும் நாயக லட்சணம், வளம்புகழும் ஊரிலே குட்டமிடும்' (அவகாஹித்தாரை - மூழ்கினவர்களை, அநந்யார்ஹம் ஆக்கும்-பிறர்க்கு ஆகாமல் அவன் ஒருவனுக்கே உரித் தாக்குதல்; நாயக லட்சணம் - தலைவனுக்கு உரிய இலக் கணங்கள்; வளம் புகழும் ஊர் - திருப்புலியூர்; குட்டமிடும். நிறைந்திருக்கும்.) என்று குறிப்பிடுகின்றது. திருப்புலியூரில் தலைவனுக்கு உரிய இலக்கணங்கள் விளங்கும் என்ற அதன் பொருளையும் சிந்திக்கின்றோம். இறையநுபவம் நிறைந்த உள்ளத்துடன் நம் இருப்பிடத்தை நோக்கித் திரும்புகின்றோம். 41. நூற். திருப். அவந். 68. - 42. ஆசா. ஹிரு.176.