பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புலியூர் மாயப்பிரான் 157 இம்மணம் வீசுவதற்குக் காரணம் உண்டோ?’ என்கின்றாள், 'இராஜ புத்திரனை அணையாதார்க்குக் கோயில் சாந்து நாறுகைக்குவிரகு உண்டோ? என்பது ஈடு. இதனால் திருப் புலியூரில் நின்ற மாயப்பிரானுடைய திருவருளுக்கே இவள் இலக்காயினாள் என்று தோழி சொல்லித் தலைக்கட்டு கின்றாள். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் அலைபாய்ந்த வண்ணம் திருக்கோயிலுக்குள் நுழைகின்றோம். நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு எழுந்தருளியிருக்கும் மாயப்பிரானையும், பொற்கொடி காய்ச்சி யாரையும் சேவிக்கின்றோம். நாமும் நம்மாழ்வார்போல் நாயகி நிலையை அடைய முயல்கின்றோம். அந்த நிலையை அடைதல் அவ்வளவு எளிதா என்ன? ஏதோ பாவனை செய்து கொண்டு ஆழ்வார் பாசுரங்களை ஓதி உளங்கரைகின்றோம் அவரோ, 'நேர்பட்ட நிறைமு. வுலகுக்கும் நாயகன் தன்னடிமை நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன்' (நேர்பட்ட வாய்த்த நேர்பட்ட-சேர்ந்த, தொண்டர். அடியார்கள், பாகவதர்கள்.) என்று தம்மை அடியார்கள், அவர்க்கு அடியார்கள், அவர்க்கு அடியார்கள், அவ்ர் அடியார்க்கு அடிமைப் பட்டவன்’ என்று சொல்லிக் கொள்ளுகின்றார். அந்த மனநிலை வரவேண்டும், செயற் படவும் வேண்டும் என்று அவாவி நிற்கின்றோம். தன்முனைப்பு கரைந்தால்தானே அது வரும்? இந்தப் பத்துப்பாசுரங்களையும் பக்தியுடன் இதினதால் அன்பே வடிவெடுத்தவனான நெடுமாற்கு அடிமை செய்வதற்கு வாய்த்தவர்கள் ஆனோம் என்ற 40. திருவாய் 8, 9 : 11