பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 மலைநாட்டுத் திருப்பதிகள் நெஞ்சமே இறைவனுக்குச் சிறந்த திருப்பதி என்றும் முடிவு செய்து கொண்டவர் எல்லாத் திருப்பதிகளையும், எல்லா மூர்த்திகளையும் ஒரே இடத்தில் கண்டார் என்னும் கதை தோன்றியதில் வியப்பொன்றும் இல்லை, இந்த ஆழ்வார் திருக்காட்கரைக்கு வந்தபோது ஒரு சமயம் தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த பெருமையைக் கூறி மகிழ்ந்தது தம் நினைவிற்கு வருகின்றது." சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகுந்தன் நெறியா வயிற்றில்கொண்டு நின்றொழிந்தாரே' என்றபடி இறைவன் முறைகெடப் பரிமாறின பரிமாற்றம் நினைவின் பொருளானதோடன்றி அப்போதைய அநுபவமே யாகி விடுகின்றது. அந்த நிலையில் இறைவனுடைய சில குணத்தை (பெரியவன் தாழ்ந்தவர்களுடன் புரையறக் கலக்குந் தன்மை) எடுத்துப் பேசி உள்ளம் கரைகின்றார் ஆழ்வார். பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம் ஆகிய நான்கு நிலைகளிலுள்ள எல்லாக் குணங்களையும் அர்ச்சாவதாரத்தில் காணலாம் என்பது தத்துவம்.” ஆயினும், ஒவ்வொரு திருப்பதியிலும் ஒல்வொரு குணம் சிறப்பாகப் பொலியும் என்றும் அத்தத்துவம் குறிப்பிடு கின்றது. இக்கருத்துப்படி திருக்காட்கரையில் சீலகுணம் கரை அழியப் பெருகும் என்பது வைணவர்களின் அசைக்க 7. பெரிய திருவந்.-68 ("கல்லும் கனை கடலும்") 8. திருவாய் 8.7 9. டிெ 8.1 . 8 . 10. ஆசா. ஹிரு.-158 11. டிெ-159