பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காட்கரை அப்பன் 1.65 முடியாத நம்பிக்கை. இங்குத் தானே சேஷ-சேஷி பாவம் (ஆண்டாள் - அடியவன் பாவனை) தட்டு மாறிப் பரிவர்த்தனை செய்து ஆண்டவனின் சீலகுணம் பெருகி வழிந்தது? ஆழ்வாரின் இந்த அநுபவத்தைத் துணையாகக் கொண்டு திருக்காட்கரைக் கோயிலை நாடிச் செல்லு கின்றோம். எப்பக்கம் நோக்கினும் ஒரே சோலை மயம், 'வெறிகமழ் சோலைத் தென்காட்கரை', 'சீர்மல்கு சோலை தென் காட்கரை”** திருவளர் சோலை தென் காட்கரை' என்று ஆழ்வார் இவ்வூரைக் குறிப்பிடுவதை யும் நினைக்கின்றோம். வழிநெடுக வாவிகளும் குளங்களும், சிற்றாறுகளும் காணப்பெறுகின்றன. "சு ைன .ெ கா ள் பூஞ்சோலைத் தென் காட்கரை' என்ற பாசுரக் குறிப்பு நம் நினைவிற்கு வருகின்றது. அத்தடாகங்களிலும் நீர் நிலை களிலும் செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்துள்ளதைக் காணும் பொழுது தெருவெல்லாம் காவிகமழ் திருக்காட்கரை' என்ற ஆழ்வாரின் பாசுரப் பகுதியை நினைந்து போற்று கின்றோம். இந்த மனநிறைவுடன் திருக்கோயிலுக்குள் நுழை கின்றோம். சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தாழ்ந்த மதில் சுவர்களால் சூழப்பெற்றுள்ள இடத்தில் அமைக்கப் பெற்றுள்ளது. அத்திருக்கோயில். மிகவும் சிறிய கோயில் தான். இங்குத்தான் திருக்காட்கரை அப்பன் தெற்கு நோக்கிய 12. ஆசா. ஹிரு-178 13. திருவாய்.9.6 : 4 14. டிெ9.6 : 3, 15. டிெ 9.5 : 5 16. டிெ 9.5 : 2 17, டிெ9.6 : !