பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#66 மலைநாட்டுத் திருப்பதிகள் திருமுக மண்டலங்கொண்டு பெருஞ்செல்வ காயகியுடன் நின்ற திருக்கோலத்துடன் காட்சி அளிக்கின்றான். இந்த எம்பெருமானின் ஆச்சரியமான பரிமாற்றங்களை நினைக்கும் பொழுது நெஞ்சு, நீர்ப்பண்டமாகின்றது; கட்டுக் குலைந்து உருகுகின்றது. ஆன்மா தாங்கக் கூடிய அளவுக்கு மீறி ஆசை யும் கரைபுரண்டோடுகின்றது. உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி பெருகுமால் வேட்கையும் என்செய்கேன் தொண்டனேன்’’’ (பரம் அன்றி-பொறுக்க அரிதாம்படி) என்ற ஆழ்வார் வாக்கினை நினைந்து நெஞ்சுருகி நிற்கின்றோம். எம்பெருமான் தாழ நின்று ஆழ்வாருடன் பரிமாறின சீலகுணத்தினை நினைந்து கரையழிகின்றோம். ஒரு குணத்தையே காலம்' என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் கால் தாழ்ந்து கணந்தோறும் புதுமை பிறந்து அநுபவிக்கவல்ல ஆழ்வாரின் பக்தியை நினைந்து போற்று கின்றோம். அவருக்கு இறைவன் அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாக' இனிக்கின்றவனல்லவா? அந்த மாயனின் அநந்த கல்யாண குணங்களை அவர் நினைக்கத் தொடங்கினால் அந்த நினைவும் நெடுகச் சென்று தலைக்கட்டாது. மீண்டும் அவற்றையே நினைக்கத் தொடங்குவர் ஆழ்வார். இங்ங்னம் காலம் செல்லுகின்றது. இங்ஙனம் நெஞ்சால் நினைக்க முடியாத அந்த அரும்பெருங் குணங்களைத் தம் வாயினால் சொல்லத் தொடங்குகின்றார் ஆழ்வார்; தம்மையும் அறியாமல் அவருடைய வாய் அத்திருக் 18. திருவாய். 9.6 ! 19. டிெ 2.5 : 4