பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காட்கரை அப்பன் 167 குணங்களைப் புகழ்ந்த வண்ணம் உள்ளது. அங்ஙனம் பேசுங் கால் அப்பேச்சு செவி வழியாக உள்ளே புகுந்து ஊற்றெடுத்து நெஞ்சினை மேலும் கரையச் செய்கின்றது. இவ்விடத்தில் ஈடு; பெருக்காற்றின் கரை இடிந்து பின் நீராய்க் கரைந்து போமாறுபோலே ஓர் உருவம் ஆக்கிக் காணவொண்ணதபடி உக்குப் போக நின்றது' என்று குறிப்பது நினைத்து மகிழத் தக்கது. தாழ நின்று பரிமாறின எம்பெருமானுடைய சீல குணத்தைப் பாட்டாகப் பாடிப் பரவினாலும் ஆழ்வாருடைய ஆன்மா வேகத் தொடங்குகின்றது. 'நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்து உகும் வினைகொள் சீர்பாடிலும் வேம்எனது ஆருயிர்’’’ என்று பேசுகின்றார் ஆழ்வார். 'எல்லாவற்றுக்கும் குளிர்ச்சி பண்ணக் கடவதான பனி தாமரை மலரை மட்டிலும் கருகப் பண்ணுமாப் போலே, சகலர்க்கும் துன்பம் நீக்குவனவான குணங்கள். எனக்கு மட்டிலும் துன்பத்தை விளைவிக் கின்றனவே” என்கின்றார்; இந்த நிலையில் எம்பெரு மானுக்கு எங்ங்ணம் கைங்கரியம் செய்வது என்று ஏங்கு கின்றார். நினைகிலேன் நானுனக்கு ஆ ள் .ெ ச ய் யு ம் நீர்மையே’ என்கின்றார். ஆழ்வார் பெற்ற அநுபவத்தை நினைத்தவண்ணம் நாமும் எம்பெருமானைச் சேவிக் கின்றோம். இங்ஙனம் ஆழ்வார் கரைந்து நெஞ்சழிவதற்கு இறைவன் என்ன தான் செய்தான்? 'நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து, என்னை 20. திருவாய் 9, 5 : 2. (ஈடு காண்க) 21. டிெ 9, 6 : 2.