பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 மலைநாட்டுத் திருப்பதிகள் ஈர்மைசெய்து என் உயிராய் என் உயிர் உண்டான்' (நீர்மை-சீலகுணம்; ஈர்மை செய்து இரு பிளவாக்கி) என்று கூறுகின்றார் ஆழ்வார். 'வஞ்சித்து நெஞ்சம் புகுந்து என்னை நீர்மையால் ஈர்மை செய்து’’ என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்வது சுவை மிக்கது. "தான் ஆண்டானும், நான் அடிமையுமான முறை தவறாது பரிமாறுவதாகவே சொல்லி என் நெஞ்சை இசையப் பண்ணி உள் புகுந்தான்' என்கின்றார் ஆழ்வார். தான் அடிமை, நான் ஆண்டான்' என்று முறைகேடாகப் பரிமாறப் போவதாக முன்னமே தெரிவித்து விட்டால் ஒருகால் ஆழ்வார் இசைய மாட்டார் என்று கருதியே இங்ங்ணம் * வஞ்சித்து (ஒன்றைச் சொல்வி, மற்றென்றைச் செய்து) உள் புகுந்தான் போலும்! இங்ங்னம் புகுந்த பிறகு நீர்மையைக் காட்டத் தொடங்குகின்றான்; தான் தாழ நின்று பரிமாறத் .ெ தா ட ங் கி ன ா ன். அதனால் நெஞ்சை ஈடுபடுத்தினான். நீண்ட நாட்களாகவே இறைவனுக்கு ஒழிவுஇல்காலம் எல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்' என்பதையே தி ரு வ ரு ள் செய்கையாக திருவுள்ளம் பற்றியிருந்தார் ஆழ்வார். இதையே ஒரு காரண மாகக் கொண்டு ஆழ்வாரை அடிமை கொள்வான் போலே அவருள் புகுந்து அவருடை உடலையும் ஆன்மாவையும் ஒரு சேரப் புசித்துவிட்டான். இதனை ஆழ்வார். திருவருள் செய்பவன்போல என்னுள் புகுந்து 22. திருவாய். 9: 6. : 3, 23. டிெ 3. 3 1