பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 மலைநாட்டுத் திருப்பதிகள் என்பதே யாகும். இங்ங்னம் தன் உயிர் பட்ட பாட்டை, வேறு எவரும் பட்டிருக்க முடியாது என்பதை, “ஆர்உயிர் பட்டது எனதுஉயிர்பட்டது’’’ என்று குறிப்பிடுகின்றார் ஆழ்வார். பகவானுடைய குணங்களுக்கு நிலம் அல்லாததாக இருக்கும் லீலாவிபூதியில் (இந்த உலகில்) தான் பட்ட பாட்டினை நித்திய விபூதியில் (பரமபதத்தில்) உள்ள நித்திய சூரிகளும் பட்டிருக்க முடியாது என்பது ஆழ்வாருடைய திருவுள்ளம். இதுகாறும் இறைவன் தன்னை உண்டபடியைக் கூறினார் ஆழ்வார். உண்டவனுக்குத் தண்ணிரும் வேண்டும் அன்றோ ஆகையால் இறைவன் தண்ணீர் பருகின படியை அருளிச் செய்கின்றார்: 'வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வு உற்ற என்னைஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான், கார்ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே’’’ (ஆர்வு-ஆசை பாரித்து-எண்ணி; கடியவன்பதற்றமுடையவன்). . - இறைவனைக் கண்டால் அப்படியே விழுங்கி விடுவதாக ஆசைப்பட்டிருந்தார் ஆழ்வார்; ஆனால் இப் படி ச் செய்ய வேண்டும் என்று தனக்கு முன்பே இறைவன் 37, ആു. 9, 6 : 9 38. ழ்ெ 9, 6 : 1.0