பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காட்கரை அப்பன் 173 எம்பெருமானுக்கும் ஆழ்வாருடைய அநுபவம் நாள்தோறும் அரிதாகவே தோன்றுகின்றது. எனவே அவன், கோள் உண்டான் அன்றி, வந்து என் உயிர்தான் உண்டான்; நாளும்நாள் வந்து, என்னை முற்றவும்தான் உண்டான்' ஒரு நாள் அநுபவித்து இனி இது நாம் அநுபவித்தது அன்றோ?' என்று கைவாங்கியிராமல் நாள்தோறும் வந்து ஆழ்வாரை அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதமாக அநுபவித்தான். இங்கே நம் பிள்ளை, அனுப்பிரமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு ' அநுபவித்தானென்கிற இது தனக்கு ஏற்றமாம்படி கெளரவியா நின்றான்' என்று அருளிச் செய்திருப்பது சிந்திக்கத் தக்கது. ஆழ்வாருடைய ஆன்மா அணுவளவாக இருப்பினும் அளவு கடந்த பாரிப்புக் கொண்டே எம் பெருமான் அநுபவிக்கு மிடத்து அந்த அணு அளவு பொருளையும் பெரிதாக்கிக் கொண்டு அநுபவிப்பதாக ஆழ்வாருடைய திருவுள்ளம் என்பது இதன் கருத்தாகும் இத்தனைக்கும் காரணம், 'காள நீர்மேகத் தென்காட்கரை என் அப்பற்கு ஆள் அன்றே பட்டது? என் ஆர்உயிர் பட்டதே',' " (ஆள்பட்டது-அடிமைப் பட்டது). 34. டிெ 1, 6 ; 8 35. விளாக்குலை கொள்ளல்-குலை குலையாகப் பறித்து வாய்க் கொள்ளுதல் (ஒரே கவளமாக உண்ணுதல் என்றபடி). 36. திருவாய் 9, 6 8