பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மலைநாட்டுத் திருப்பதிகள் நீண்ட தொலைவு நடந்து நொந்தனவே என்று பகர்ந்து கொண்டே அவற்றை மெல்லெனப் பிடிக்கின்றான். குசேலர் கண்ணன் செய்யும் உபசாரங்களுக்குத் தன் பாரதந்திரத்திற் கேற்ப (தலைவனது வசத்திலிருப்பதற்கேற்ப) இசைந்திருக் கின்றார். இதனைப் பாடலில் காண்க. 'வழி நடந் திளைத்த வே இம் மலரடி இரண்டும்?' என்று கழிமகிழ் சிறப்ப மெல்ல வருடினான் கமலக் கண்ணன்; ஒழிவுறு தவக்கு சேலன் ஒன்றும்பே சாதிருந்தான்' தம்மை அடிமை கொள்பவனைப் போன்று, தம்மிடம் இட் டித் தாழ நின்றுத் தம் ஆன்மாவை முற்றும் கவர்ந்து கொண்ட ஆச்சரியமான சேஸ் டிதங்களை (செயல்களை) யுடையவன் ஈசுவரன் என்பதை ஆழ்வாரும், 'ஆட்கொள்வான் ஒத்து, என் உயிர் உண்ட மாயன்' எனத் தெரிவிக்கின்றார். இதனால் ஈசுவரன் உயிரைத் தனக் கெனவே வினியோகம் கொண்டுள்ளான் எ ன் ப த ைன அறிகின்றோம். எம்பெருமானை அநுபவிக்கும் ஆழ்வாருக்கு எப் பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழிதொறும், அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே' என்னும்படி நாள்தோறும் அரிதாகத் தோன்றுமாப் போலே, 31. குசேலோபாக்கியானம் - குசேலர் நகர்ப்புறம் அடைந்தது-செய். 410. 32. திருவாய் 9, 6 7 33. டிெ 2.5 4