பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காட்கரை அப்பன் 171 கொள்ள வேண்டும்” என நினைத்துச் சீவனாகிய தான் பின் வாங்கி அவன் போகத்தைக் கெடுக்காமவிருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இதுதான் பகவானுக்கே ஆனந்தம் ஏற்படுமாறு வினியோகப் படுகை என்று சொல்லப் பெறுவதாகும். - ஈசுவரன் சேதனனை (உயிரை) வினியோகம் கொள்ளல் இரண்டு வகைப்படும்; இவற்றுள் அதன் தலைவனாகவே இருந்து உயிரை அடிமையாக வைத்துப் பரிமாறுதல் ஒரு வகை. சில சமயம் அவன் உயிருடன் கலந்து போகந் துய்க்கக் கருதுவான். அவ்வமயம் ஈசுவரன் உயிரை அடிமை கொள் பவன் போன்று, உயிரை நெருங்கி, அதன்மாட்டுத் தனக் குள்ள வேட்கை மிகுதியால், உயிரைத் தலைமையாக வைத்துத் தான் அடிமையாக இருந்து, இழி தொழில் செய்து அவ்விதத்தில் உயிரை வினியோகம் கொள்ளுதல் மற்றொரு வகை. ஈண்டுக் கூறிய இரண்டாவது வகை அநுபவத்திற்குக் குசேலரின் வாழ்க்கை வரலாற்றின் நிகழ்ச்சி யொன்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். பரம பக்தராகிய குசேலர் தன் துணைவியின் துரண்டுதலால் கண்ணனிடம் செல்லு கின்றார். குசேலரின் வருகையைக் காவலரால் அறிந்த துவரை நாதன், தானே அரியணையினின்றும் இறங்கி வந்து, 'திலகமண் தோயஐயன் - திருவடி வணங்கிப் பின்னர் நிலவுமெய்ப் புளகம் போர்த்து - நிறம்புறத் தழுவிக் கொண்டான்' என்றுவாறு குசேலர் திருவடிகளில் வணங்குகின்றான். பின்பு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவருடைய திருவடிகளைத் தன் மடிமீது வைத்து, "இத்திருவடிகள் 30. குசேலோபாக்கியானம் - குசேலர் நகர்ப்புறம் அடைந்து-செய், 404. .