பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 மலைநாட்டுத் திருப்பதிகள் i கண்ணன்? பாடுபட்டுத் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் வருத்தத்துடன் வெளிப்படும் கூற்றென்று நாம் அறிகின்றோ மன்றோ? இங்ங்ணம் நம்மாழ்வார் பெற்ற அநுபவங்களை யெல்லாம் முறையாக் எண்ணிய வண்ணம் திருகாட்கரை அப்பனையும், பெருஞ் செல்வகாயகியையும் சேவிக் கின்றோம். நம்முடைய பிறப்புத் தொடர்கள் முடிவுபெற்று அவற்றிற்கு அடியாகவுள்ள சம்சாரமும் (உலகவாழ்க்கையும்) நசிக்கும் என்ற உணர்வும் நம்மிடையே எழுகின்றது. எழவே, ஆழ்வார் அருளியுள்ள ஒப்புயர்வற்ற திருக்காட்கரை அப்பன் பற்றிய திருவாய்மொழியை அவன் சந்நிதியிலேயே பாடிக் கரைகின்றோம். இங்ங் னம் கரைகின்ற நிலையில், மாற்கவும் தாம்தாம் வழிபடும் தெய்வமும் ஏற்க உரைப்பார்சொல் எண்ணாதே, தோல் குரம்பை நாள் கரையா முன்னமே நல்நெஞ்சே! நாரணன்.ஆம் காட்கரையாற்கு ஆள் ஆகாய் gfra应””*° (மாற்கம்-மார்க்கம், வழி; தோல்குரம்பை-தோல் போர்த்த உடல்; ஆள்-அடிமை). என்ற பிள்ளைப் பெருமாள் அய்யங்காளின் பாடலையும் சிந்திக்கின்றோம். எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் நம் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றோம். 41. திருவாய். 9, 6 : 11 42. நூற். திருப், அந்-61,