பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. திருமூழிக்களத்து விளக்கு பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத் தானாய்' என்று திருமங்கையாழ்வாரால் போற்றிப் புகழப்பெற்றவன் திருமூழிக்களத்து எ ம் பெ ரு ம | ன். பரத்துவம், வியூகம், அவதாரம், அந்தர்யாமித்துவம், அர்ச்சாவதாரம் ஆகிய எம்பெருமானுடைய ஐந்து நிலை களில் முதல் நான்கிலும் சம்பந்தம் பெறாதவர்கள் (அந்வயிக்கப் பெறாதவர்கள்) பின்னானார் என்று குறிப்பிடப்பெறுபவர்கள். அவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளான் எம்பெருமான். திருமுழிக்களம் என்றது எல்லாத் திவ்விய தேசங்கட்கும் உபலட்சணமாய் நிற்பதாகக் கொள்ளல் வேண்டும். ஏனைய நான்கு நிலைகளிலும் அநுபவிக்கக் கூடிய எல்லாத் திருக்குணங்களும் நிறைந் திருப்பது இந்த அர்ச்சாவதாரத்தில்தான், இந்த அர்ச்சாவதாரம் என்ற உருவம் எக்காலத் தவர்க்கும் எத்தேயத்தவர்க்கும் காட்சி அளிக்கும்; அவரவர் விரும்பிய நலனையும் ஈந்து நிற்கும். மனம் வாக்குக் காயங் கட்கு எட்டாத பரம் பொருளுக்கு ஓர் உருவத்தையும் ஓரிடத்தையும் நிலை நாட்டி வழிபடுதல் யாங்ஙனம் பொருந்தும்? என ஐயுறலாம். ஒரு நாமம் ஒருருவம் ஒன்று மிலா இறைவனுக்கு ஆயிரம் திருநாமம் பாடுவது’ எதற்காக என்று வினவலாம். அருவாய் நிற்கும் ஆண்டவன் 1. திருநெடுந், -10 2. திருவா - திருத்தெள்ளேணம்-1 —12–