பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மலைநாட்டுத் திருப்பதிகள் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அவற்றிதுமீது கொண்டுள்ள தண்ணளியால் உருக் கொண்டு எழுந்தருளி யுள்ளனன் என்பது சமயக் கொள்கை. நம் மனமும், புலன் களும், செயல்களும் ஒரு வரையறைக்குட்பட்டவை. ஆதலின், அதற்கேற்ப எல்லாவற்றையும் கடத்து நிற்கும் கடவுளை வகுத்துக் கொண்டாலன்றி நாம் அக்கடவுளிடம் அன்புசெலுத்தவோ அவனது அருளைப் பெறவோ இயலாது. பரந்து செல்வதும், கட்டுக்கடங்காததும், காற்றிலும் கடுகியோடுவதுமான மனத்தை ஒரிடத்தில் நிறுத்தித் தியானிக்க ஓர் உருவம் இன்றியமையாதது. உருவம் இன்றேல் மனம் ஒன்றுபடுதல் இல்லை. ஊணக்கண் காணாக் கடவுளிடம் மனத்தைக் குவியச் செய்து தியானத்தில் துழைக்க உருவம் இன்றியமையாது வேண்டப் பெறுவது. பிற சமயத்தினரைக் காட்டிலும் வைணவர்கட்கு உருவத்தில் ஊற்றம் அதிகம். இதுவே பக்தியைக்காட்டிலும் சிறந்த பிரபத்தியைச் (சரணாகதியை) சேதநன் கடைப் பிடித்தற்குப் பொருத்தமான இடம் என்பதும், இதில் மேற்கொள்ளும் பிரபத்தியே தவறாமல் விரைவில் பயனளிக்கும் என்பதும் அவர்கள் உறுதியாகக் கொண்ட நம்பிக்கை. ஆழ்வார்கள் அனைவருமே அர்ச்சைக்கு மங்களா சாசனம் செய்திருப்பதுவே இதற்குத் தக்க சான்றாகும். அர்ச்சையின் பெருமையைப் பிள்ளை லோகாச்சாரியரும். 'பூகத ஜலம்போலே அந்தர்யாமித்துவம்: ஆவர்ண ஜலம்போலே பரத்துவம்; பாற் கடல் போலே வியூகம்; பெருக்காறுபோலே விபவங்கள்; அதிலே தேங்கிய மடுக்கள்போலே அர்ச்சாவ தாரம்' என்று குறிப்பிட்டிருப்பது ஈண்டுக் கருதத் தக்கது. பூமிக்குள் ஆழத்தில் அடங்கிக் கிடக்கும் நீரைப் போன்றது அந்தர் 3. பூர்வசன முதற் பிரகரணம்-39