பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூழிக்களத்து விளக்கு 179 யாமித்துவ நிலை; அண்டத்திற்குப் புறத்தே பெருகிக் கிடக்கும் ஆவரண நீர் போன்றது. பரத்துவ நிலை: அண்டத்திற்கு உட்பட்டிருந்தும் கிட்ட அரிதாக இருக்கும் பாற்கடல் போன்றது வியூக நிலை; எப்பொழுதோ வெள்ளமிட்டோடின. பெருக்காறுகள் போன்றவை விபவ அவதாரங்கள்; பெருக்காறு பெருகி வெள்ளமிட்டோடின போது அதிலே தேங்கி நின்ற நீர் நிலைகள் போன்றவை அர்ச்சாவதாரங்கள். நீர் விடாய்மிக்குத் துடிக்கும் ஒருவனுக்கு முதல் நான்கு நிலைகளிலுமுள்ள நீர் உடனே பயன்படாது; மடுக்களிலுள்ள நீரே உடன் விடாய் தீரப் பயன்படும்: அங்ங்னமே, முதல் நான்கு நிலைகளிலும் உள்ள எம்பெருமான்கள் அப்பொழுதே கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்?’ என்று ஆழ்வார் கூறியவாறு கண்டு பற்ற வேண்டுமென்று ஆசைப்படும் முமுட்சுகளுக்குப் பயன்படுத்துவதில்லை; திருக்கோயில்களிலும் அடியார்களின் திருமாளிகைகளிலும் எழுந்தருளியுள்ள அர்ச்சாவதாரமே அவர்கட்குப் பெரிதும் பயன்படக்கூடியது. திருமூழிக்களம் என்பது மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. ஏனைய மலைநாட்டுத் திருப்பதிகள் போலவே இதுவும் இயற்கை வனப்பு கொஞ்சும் சூழலில் அமைந் துள்ளது. இந்தத் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைத் திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார் 'முனியே திருமூழிக்களத்து விளக்கே!' எ ன் று ம் 'மூழிக்களத்து விளக்கினை' என்றும் போற்றுவர். 4. திருவாய் 9,8.6. 5. பெரி திரு 7.1 : 6 6. பெரி திருமடல் - கண்ணி 129 வளத்தினை' என்றும் பாடம் உண்டு.