பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மலைநாட்டுத் திருப்பதிகள் “சுடர்வளையும் கலையுங்கொண்டு அருவினையேன் தோள் துறந்த படர்புகழான்' என்கின்றாள். தன்னுடைய வளையலையும் சேலையையும் கவர்ந்து கொண்டு சென்றவர் அவர். ஆதரித்து வந்து தன்னைக் கலந்தவர் தன்னைவிட்டுப் போகும்படியான பாபத்தைப் பண்ணினவள் என்பதை அருவினையேன்” என்று குறிப்பிடுகின்றாள். அவருடைய புகழோ சொல்லி முடியாது; பரந்த புகழையுடையவர். அங்ங்ணம் கவர்ந்து சென்றவர் கண்காணா இடத்திற்கு ஓடிவிடவும் இல்லை. 'திருமூழிக் களத்துறையும் பங்கயக்கண் சுடர்பவள வாயன்' அவர் அண்மையிலேயே, திருமுழிக் களத்தில் நித்திய வாசம் செய்கின்றார் என்பதையும் குறிப்பிடுகின்றாள். அவரது நோக்கையும் முறுவலையும் அநுபவித்தவள் எங்ங்ணம் ஆற்றியிருக்க முடியும் என்பதனை எடுத்துக்கூற வேண்டும் என்பது குறிப்பு. சிறிது நேரத்தில் ஆழ்வார்நாயகி சில அன்னங்களைப் பார்க்க நேரிடுகின்றது, அவற்றைப் பார்த்து வேண்டு கின்றாள். அவருடைய பெருமைக்கு இங்ங்ணம் ஒருத்தியைக் கலங்க வைப்பது தகுதியன்று என்பதை உணர்த்துமாறு செப்புகின்றாள். "தகவுஅன்று என்றுஉரையீர்கள் தடம்புனல்வாய் இரைதேர்ந்து மிகஇன்பம் படமேவும் மெல்நடைய அன்னங்காள்! 30. திருவாய் 9, 1 : 1. 31. බැ. 9.7 : 7: