பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுழிக்களத்து விளக்கு j93 பற்றிச் சொல்லுவீர்களாக' என்று பணிக்கின்றாள். அவை இரண்டும் தளர்ச்சியுற்றமையைக் கூற வேண்டும் என்ப தாகவும் கொள்ளலாம்; அல்லது. அவை தன்னுடையவை யாகும் என்பதாகவும் கொள்ளலாம். அறிவித்த அளவிலே, அவர் வரவு தப்பாது என்பது குறிப்பு, அடுத்து. இன்னொலி செய்து கொண்டு பறக்கும் வண்டினங்களையும் தும்பிகளையும் பார்த்துப் பேசுகின்றாள். அவையோ அவள் இருக்கும் சோலையில் வயிறார மது நுகர்ந்து மகிழ்ச்சிபொங்கிய நிலையிலுள்ளவை. அவரோ, தம் அழகுக்கு ஆபத்து நேராத வண்ணம் திண்ணிதான மதில் சூழ்ந்த திருமுழிக்களத்தில் உள்ளார்; காப்பதற்கென்றே தனி மாலையிட்டுக் கொண்டு இருக்கின்றார். அவருடைய காயாம்பூ மேனியின் வடிவழகில் தனக்குள்ள விருப்பத்தைச் சொல்லுமாறு பணிக்கின்றாள்.'" இவ்விடத்தில் ஆறா பிரப்படி அருளிச் செயல்: 'வண்டினங்காள் தும்பிகாள்! உன் அழகைக் காணப்பெறாதே அவள் இழந்துபோம். இத்தனை யோவென்று சொல்லிக்கோள் என்கிறாள்' என்பதாக . இங்ங்னம் வண்டினங்களுடன் உரையாடிக்கொண் டிருக்கும்பொழுது குருகினங்கள் அடங்கிய பறவைக் கூட்டம் ஒன்று வருகின்றது. அவற்றைப் பார்த்துப் பேசத் தொடங்கு கின்றாள் பராங்குச நாயகி. “ஒருநாள்ஒர் தூயமாற்றம் படர்பொழில்வாய்க் குருகினங்காள்! எனக்கொன்று பணியிரே' என்று தனக்காகத் தூது போய் வரும்படி வேண்டுகின்றாள். யாரிடம் போய் வரவேண்டும் என்பதைக் குறிப்பிடுங்கால், 28. திருவாய் 9.1 8. 29. ഒു. 9, 7 : 7. س-13 سد