பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மலைநாட்டுத் திருப்பதிகள் பெற்ற சில பறவைகள் தன் காரியத்தைத் தலைக்கட்டும் என்று பொறுக்கக்கூடிய நிலையிலில்லை. அவள். அடுத்து, இல வண்டுகளைப் பார்த்து, 'துரதுரைத்தல் செப்புமின்கள் துரமொழிவாய் வண்டினங்காள்!" என்று வேண்டுகின்றாள். அவள் விரும்பாராகிலும் வண்டு களின் பேச்சு இனிமையாக இருப்பதால் வரவேற்கப்பெறும் என்பதாகக் குறுப்பிடுகின்றான். இனிய பேச்சினால் எம்பெருமானையும் வசப்படுத்திக் கொள்ள வல்லவர்கள் ஆசாரியர்கள் என்பது குறிப்பு. வண்டுகள் செல்லக்கூடிய இடமோ போது இரைத்து மது நுகரும் பொழில்’ சூழ்ந்துள்ள திருமூழிக்களம் ஆகும். மலர்கள் பூத்து மண்டிக்கிடக்கும் சோலைகளாதலால் வண்டுகள் மகிழ்ச்சி பொங்க மதுபானமும் பண்ணலாம் படியான இடம் என்பதையும் குறிப்பிடுகின்றாள். “மாதரைத்தம் மார்பகத்தே வைத்தார்க்கு என்வாய்மாற்றம் துதுஉரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே” துண்டுகள் செய்தியைச் சொல்லுமளவே வேண்டப் படுவது; அவற்றின் சொற்களைக் கேட்டுக்கொண்டிருக்கவும், கேட்டுப் பாராட்டுவதற்கும் அருகே பெரியபிராட்டி இருப்ப தால் பரிந்துரைத்தலுக்கும் (புருஷகாரம்) குறைவில்லை என்கின்றாள். உலக அன்னையாகிய பெரியபிராட்டியார் சீவான்மாக்களின் துன்பத்தை எடுத்துரைத்து எம் பெருமானின் கருணை வெள்ளமிட்டோடக் காரணமாக இருப்பாள் என்பது வைணவக் கொள்கை, "என்ன சொல்ல வேண்டும் தெரியுமோ? என்னுடைய கைவளையும் சேலையும் 25. திருவாய் 9, 7 9 ^7. துெ 9, 7 5