பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுழிக்களத்து விளக்கு 191 பொழியும் ச்மயத்தில் தான் மேகத்தில் மின்னல் தோன்றும். அங்ஙனமே சிறப்புப் பொருள்களை அருளும் நிலையில் ஆசாரியர்களும் இருப்பர், மேலும் மேகத்தை ஒளிமுகில்: என்றுவிளித்து, எம்பெருமானையும் "ஒண்சுடர் என்று குறிப்பிட்டிருப்பதிலும் ஒருதனிச் சிறப்பு உண்டு. ஆசாரியர்கள் எம்பெருமானினின்று வேறுபட்டவரல்லர் என்றும், இருவரும் எல்லாவற்றிலும் ஒப்புடையவர் என்றும் காட்டற்காகவே இங்ஙனம் கூறப்பெற்றதாகக் கொள்ள வேண்டும். பரமபதத்தில் காட்டும் பெருவிருப்பத்தை எம்பெருமான் தன்பக்கல் காட்டுவதாக ஆழ்வார்நாயகி கொள்வதால் தெளிவிசும்பு திருநாடாகத் தீவினையேன் மனத்துறையும்’ என்று குறிப்பிடுகின்றாள். நெஞ்சில் எழுந்தருளியிருந்தும் அவனைக் கண்ணால் காணமுடிய வில்லையே என்று நைகின்றாள். துன்புறுபவர்களைக் காப்பதற்கென்று திரு முடியில் தனிமாலையிட்டிருக்கும் எம்பெருமானுக்குத் தன் விண்ணப்பத்தைத் தெரிவிக்குமாறு வேண்டுகின்றாள். ஈண்டு ஆறாயிரப்படியின் அருளிச்செயல் சுவை மிக்கது: 'அவளுக்கு அருளிர் என்ன அமையுமோ? இன்னாருக்கு அருளிர் என்ன வேண்டாவோ என்னில், யாவள் ஒருத்தியுடைய நெஞ்சை உமக்குத் திருநாடாகக் கொண்டு நீர்உறைகின்றீரோ அவளுக்கு அருளிர் என்று சொல்லிக்கோள் என்கின்றாள்' என்பதை எண்ணி எண்ணி மகிழ்வோமாக. சீதாப்பிராட்டியை ஆயிரக்கணக்கான வானரங்கள் தேடுவதைப்போலவே, கண்ணில் கண்டவற்றை எல்லாம் ஏவுகின்றாள் ஆழ்வார்நாயகி. பறவைகளைத் தூதுவிடுத்த ஐதிகத்தைக்குறிப்பிடும் பட்டர், சக்கரவர்த்தித் திரு மகனார் திருவவதரித்தபின்பு வானரஐாதிiறு பெற்றது போல, ஆழ்வார்கள் திருவவதரித்தபின்பு பட்சிஜாதிiறு பெற்றது' என்று சுவையுடன் அருளிச் செய்வர். அனுப்பப்