பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹96 மலைநாட்டுத் திருப்பதிகள் தையும் பெற முயலுகின்றோம். நம்மாழ்வார் அதுபவமே சீதாப்பிராட்டியார் பெற்ற அதுபவமாகும். இதை ஆழ்வாரே, 'ஒழிவின்றித் திருமுழிக் களத்து உறையும் ஒண்சுடரை ஒழிவில்லா அணிமழலைக் கிளிமொழியாள் அவற்றியசொல்’’** என்று குறிப்பிடுவதைக் காணலாம். இதனையொட்டியே ஆறாயிரப்படி அருளிச்செயலும் 'எம்பெருமானைப் பிரியில் தரிக்கமாட்டாத ஸ்வபாவையாயிருப் பாளொரு பிராட்டி அவளைப் பிரிந்து அலற்றின பாசுரத்தாலே, தத்ஸ்த்ருசஸ்வ பாவரான (பிராட்டிக்குச் சமமான இயல்புடைய) வண்குரு கூர்ச் சடகோபன் எம்பெருமானைப் பிரிந்தலற்றின இப் பத்து' என்று குறிப்பிடுகின்றது. இராமகிருஷ்ண முதலாய அவதாரங்கள் எடுத்த பிறகு இறுதியில் தன் சோதிக்கு எழுந் தருளும் நிலை ஏற்படுகின்றது; அர்ச்சாவதாரம் அப்படி யின்றி, சம்சாரத்தின் கிழங்கு எடுத்தாலல்லது பேரேன்' என்றிருக்கும் இருப்பேயாதலால் ஒழிவின்றி உறையும்’ என்று சிறப்பிக்கின்றார். இந்தத் திவ்வியதேசத்தில் விளங்கும் குணத்தை, சமகாத்மாக்கள் விரஹம் சஹியாத மார்த்தவம், வளத் தின்களித்தே கூடு பூரிக்கும்’ |மார்த்தவம் - செளகுமார்ய குணம் களம் - திருமூழிக் களிம்; வளம் - செல்வம்; கூடுயூரிக்கும் - நிறைத்திருக்கும்.) என்று குறிப்பிடும் ஆசாரிய ஹிருதயம். இத்தலத்திற்குரிய குணம் செளகுமார்யம் என்பது; இதுதிவ்யாத்ம சொரூபம் பற்றியது. இத்தலத்திற்குரிய பத்துப் பாசுரங்களையும் 33. திருவாய். 9.7 : 1.