பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருவண்பரிசாரத்துத் திருவாழ் மார்பன் உலகமெல்லாம் இறைவனுக்கு உடல் என்ற கொள்கை வைணவ சமயத்தில் மிகவும் முக்கியமானது. இறைவனையும் உலகத்தையும் தனித்தனியாகப் பிரித்தல் இயலாது. ‘அடியோ மோடும் நின்னொடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’’’ என்ற பெரியாழ்வாரின் திருவாக்கின்படி எம்பெருமான் ஆன்மாவாகவும் நாம் அவனுக்கு உடலாகவும் இருக்கும் இருப்பு எப்பொழுதும் உண்டென்று கூறுவர் வைணவப் பெருமக்கள். எனவே, உலகிற்குச் செய்யும் தொண்டு (கைங்கரியம்) உண்மையில் ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டேயாகும். நாம் ஒரு பெரியாரது உடம்புக்குப் பணி (கிடாம்பி ஆச்சான் இராமானுசருக்குச் செய்தது போன்றது) செய்தால் அந்தக் கைங்கரியம் அந்தப் பெரியாருக்குச் செய்த: தொண்டாகவே கருதப்பெறுகின்றதன்றோ? அந்த உடம்பிற்குச் செய்யும் பணி அந்த உடம்பினையுடைய பெரியவருக்கு உகப்பினை விளைவிப்பதுடன் அவரது உடலுக்கும் நலம் தருகின்றது. இப்படியே எம்பெருமானின் உடலாகிய உலகிற்குச் செய்யும் தொண்டும் உலகிற்கு நன்மை செய்வதுடன் அதனை உடலாக உடைய ஆண்டவனுக்கும் உகப்பாக 1. திருப்பல் 2.