பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மலை நாட்டுத் திருப்பதிகள் அமையும் என்ற ஆழ்ந்த பொருளை உள்ளத்தில் கொண்டு தான், - 'அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே” (ஆழியான் - சக்கரப் படையுடைய திருமால்) என்று திருமழிசையாழ்வாரும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார் என்று கருத இடம் உண்டு. நம்மிடையே வாழ்ந்த காந்தியடிகள் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்த மேலான நெறியும் இதுவே. தாயுமான அடிகளும், 'அன்பர்பணி செய்யானை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்(து) எய்தும் பராபரமே’’’ (இன்பநிலை - சிவானந்த நிலை) என்று இக் கருத்தினையே வலியுறுத்தியுள்ளார். நம்மாழ் வாரின் திருவாய்மொழியிலும் இக்கருத்து பல இடங்களில் வற்புறுத்தப்பெற்றுள்ளது. இதனையே உரிய தொண்டர் ஆக்கும், உலகம் உண்டார்க்கே’’ என்றும் அவர் அடிமைத் திறத்து ஆழியாரே' என்றும் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார் இந்த ஆழ்வார். இந்த எண்ணங்கள் நம் மனத்திடையே குமிழியிட்ட வண்ணம் திருவண் பரிசாரம்’ என்ற திவ்விய தேசத்திற்குப் புறப்படுகின்றோம். இந்தத் திருப்பதி திருநெல்வேலி - நாகர் கோயில் நெடுஞ்சாலையில், நாகர்கோவிலிலிருந்து சுமார் 2. திருச். விருத், 76, 3. ஆர்.பா.-பராபரக் கண்ணி.155. 4. திருவாய் 6.9: 11 5. டிெ 7.3 11