பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்பரிசாரத்துத் திருவாழ்மார்பன் 3. இரண்டு கல் தொலைவில், உள்ளது; நெடுஞ்சாலையில் ஒரு வாய்க்கால் பாலத்தருகில் இறங்கி முக்கால் மைல் நடந்து சென்றால் ஊரை அடையலாம். நாகர்கோவிலில் தங்கிப் பேருந்துமூலம் இவ்வூருக்கு வருவதே சிறந்தது. நாகர் கோவிலிலிருந்து திருவண்பரிசாரத்திற்கே நகர் - பேருந்து வசதி உண்டு. காலையில் நாம் தங்குமிடத்திலிருந்து (உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் நாகர்கோவிலில் நிறைய உள்ளன.) நன்னீராடித் துய ஆடை உடுத்திக் கொண்டு பேருந்து மூலம் திருவண்பரிசாரத்திற்குப் புறப்படுகின்றோம். அரைமணி நேரத்திற்குள் திருக்கோயிலை அடைகின்றோம். மலைநாட்டுக் கோயிலின் களை இங்குத் தென்படுகின்றது. தூய்மை, அமைதி, ஒழுங்கு முதலிய பண்புகளை இங்குக் காணலாம். மலைநாட்டு வளமும் இயற்கைச் சூழலும் இங்குத் தலைகாட்டத் தொடங்கிவிடுகின்றது. திருக் கோயிலுக்கு எதிரிலேயே பூரீ காரியம்' அலுவலகம் உள்ளது. அதன் அருகிலேயே திருக்குளமும் உள்ளது. மலைநாடு நீர் வளம் மிக்க நாடு அல்லவா? எனவே, நீருக்கும் பஞ்சமில்லை; பளிங்கு போன்ற தூய்மையான நீர் நிறைந்த குளம் அது. மாற்று ஆடைகள் கொண்டு வந்திருந்தால் குளத்தில் ஆனந்தமாக நீராடவும் செய்யலாம். - ; திருவண்பரிசாரம் நம்மாழ்வாரின் திருத் தாயார் :உடைய கங்கையார் பிறந்த ஊராகும். இந்த ஊர் எம் பெருமானும் அந்த அம்மையாருக்குக் காட்சி தந்ததாகப் புராண வரலாறு கூறுகின்றது. திருக்குருகூரில் திருப்புளி யாழ்வாரின் திருவடியில் அமர்ந்து இவ்வுலக ஆன்மாக்கள் உய்யும் பொருட்டுத் திருவாய்மொழி முதலிய திவ்வியப் பிரபந்தங்களை அருளிய நம்மாழ்வார் இத்திருப்பதி எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்று பாரித்து நிற்கின்றார். இந்த எம்பெருமானின் திருக் குணத்தை ஆசாரிய ஹிருதயம்' . . . . . . . . . .