பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. காவாய் உறையும் காணகம்பி இவணவ சமயத்தின் முடிவான குறிக்கோள் எம்பெரு மானுக்கு அடிமை செய்வதேயாகும். அதுவும் எம்பெரு மானின் உகப்புக்காகவே செய்வது மிகவும் சிறந்தது என்பது அச்சமயத்தின் சிறந்த கொள்கையாகும். அங்ஙனம் அடிமை செய்யுங்கால் தான் செய்வதாக எண்ணும் தன் முனைப்பே (Egotism) தலைகாட்டலாகாது: ஒழிவில் காலம்எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமைசெய்ய வேண்டும் நாம்: (ஒழிவுஇல் - ஒய்வில்லாத, உடனாய் - கூடவே இருந்து: வழுவிலா - குற்றமற்ற.) என்று நம்மாழ்வார் கூறுவது காண்க. திருவரங்கப் பெரு மாளரையர் இத்திருவாய் மொழியைப் பாடப்புக்கால் ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம்...என்று இங்ங்னே நெடும் போதெல்லாம் பாடி மேல் போகமாட்டாதே தலைக்கட்டிப் போவாராம்' என்பதாக ஒரு ஐதிகம் கூறப். பெறுகின்றது. இதனால், அரையர் ஆழ்வாருடைய நிலைமையை அப்படியே அடைந்து (Make-belice) கைங் கரியத்தில் தமக்குள்ள ஈடுபாட்டைக்காட்டினார் என்பது அறியத்தக்கது. ஒரு சமயம் எம்பெருமானார் இந் திருவாய்மொழியை அருளிச் செய்தபோது தம் முன்னிலையில் நூற்றுக்கணக்காக !. திருவாய் 3. 3: 1